அன்று போர் நடந்தபோது கடைசுவரையில் காங்கிரசை விட்டு பிரியாமல் கள்ள மௌனம் சாதித்தது கருணாநிதி மட்டுமல்ல, பாமக-வும்தான்.
இன்று மோடி பட்டாபிஷேகத்திற்கு வருகை தரும் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து வெளிப்படையாக அறிக்கை விடும் வைகோ போலன்றி இதிலும் கள்ள மௌனம் சாதிக்கிறார் ராமதாசு.
வைகோ ஒரு தெலுங்கராம். ராமதாசு தமிழ்க்குடிதாங்கியாம்.
இனி வேண்டுமானால் பிஜேபி-காரர்களைவிடவும் ராஜபக்சே வருகையை நியாயம் கற்பித்து பாமக-வினர் இப்படி அறிக்கைவிடுவார்கள் பாருங்கள், "இலங்கையுடன் நட்பு பேணினாலே மாற்றம் சாத்தியம்"
ஐநா சபைக்குச் சென்று தமிழர்களுக்கு ஆதரவாய் அன்புமணி பேசுவதைக் காட்டிலும், பேசவேண்டிய தக்க சமயங்களில் உள்நாட்டிலும் வலுவாய் கருத்துக்களை வெளிப்படுத்தி பேசுவதும்தானே அவசியமானது.
No comments:
Post a Comment