தம்பி, எந்த சாதியின் பேரால் குலத்தொழில் மாத்திரம் செய்யும்படி நம்மை வைத்தார்களோ அதே சாதியின் பேரால் நமக்கான உரிமையை பெற்றுக்கொள்ளத்தான் இந்நடைமுறை. இந்த நடைமுறையை உடனேயே ஒழிக்கும்படி செய்தால் நாம் எல்லோரும் தலைமுறைக்கும் மாடு மேய்க்கவேண்டியதுதான். சாதிப்பெருமைகளை பேசிக்கொள்வதைத்தான் எல்லா சாதியினரும் கைவிடவேண்டும். ஹிந்து மதத்தைப் பொறுத்தவரையில் நாம் பார்ப்பானுக்கு கீழானவர்களே. இப்போதுதான் இடஒதுக்கீட்டால் நாடு முழுதும் முதல் தலைமுறையாய் படிக்கிறோம். உயர் சாதிக்காரன் அன்றிலிருந்தே நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி சகல அறிவும் அவனோடுமட்டும் இருக்கும்படி பார்த்துக்கொண்டான். நாம் எல்லோரும் அவனையொத்த அதிகார நிலைக்கு வர இன்னும் பல தலைமுறைகள் தொடர்ந்து படிக்கவேண்டும். அதற்கு இட ஒதுக்கீடே வழி. அதையும் ஒழிக்க நினைக்கிறான் பிஜேபி. நம்மவர்கள் பலர் விவரமின்றி பார்ப்பானுக்கும் மதத்துக்கும் பல்லக்கு தூக்குகிறார்கள். ஆடு மாடு மேய்க்கும் யாதவ்கள் இரண்டு மாநில முதலமைச்சராவதைக்கூட அவர்களால் பொறுக்க முடியவில்லை. இன்னும் உபி, பீகாரில் இந்த யாதவ்கள் முதல்தலைமுறைகூட படிக்காமல் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு இல்லாமல் போனால் அவர்களின் நிலைமை? சாதி ஒழிய வேண்டுமென்றால் "உன்னைவிட என் சாதிக்கு அதிக பெருமை என்ற மனோபாவம்" முதலில் எல்லோரிடமிருந்தும் மாறவேண்டும். அதற்கு இந்த சாமி கதைகளும் புராணப்புரட்டுகளும் ஒழிக்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment