4.5.14

"பெரியார் ஒரு தமிழ்விரோதி"

ஒரு வீட்டில் உள்ள அனைத்து குப்பைகளையும் ஒருவரே சுத்தம்பண்ணியிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சற்றேனும் அறிவுப்பார்வையா? அடிமையாக்கி வைத்திருந்த ஆரிய வரலாற்றுக் குப்பைகளை மட்டும் அவர் அகற்றினார். அதற்காக தன்னால் முடிந்தவரை உழைத்தார். தமிழனுக்கு தன்மான உணர்ச்சி தந்து "தமிழ்நாடு தமிழருக்கே" என்றும் முழங்கினார். தமிழனுக்கு இருக்கிற குறைகளையெல்லாம் விமர்சனத்தோடு சுட்டிக்காட்டினார். அவரேதான் எல்லாவற்றையும் செய்திருக்க வேண்டுமா? நம் முன்னோர்கள் இப்படிக்கூட சிந்திக்காமல் வாழ்ந்துவிட்டுப் போயினரே? பெரியாரை குறைசொல்லும் முன் நாம் அதற்கல்லவா அவமானப்பட வேண்டும்? அவர் ஒன்றை மாற்றினார் என்றால் அடுத்த தவறை நீங்கள் மாற்றுங்களேன். எல்லாமே அவர்தான் செய்திருக்க வேண்டுமென்றால் நாம் என்னதான் கிழிக்கப்போகிறோம்? உலகம் தோன்றி நாகரீகம் வளர்ந்து அறிவியல் வளர்ந்து இத்தனைக்காலம் ஆகியும் கொஞ்சமாவது இன்றைக்காவது யோசிக்கிற நிலை வருகிறதா? இன்னமும் கட்டுக்கதைகளைப் பிடித்துத்தானே தொங்கிக்கொண்டிருக்கிறோம்? பெரியாரை குறை சொல்ல அருகதை யாருக்கு இருக்கிறது. மதம் என்ற சாக்கடை உணர்வோடு பெரியாரை அளந்தால் நாற்றமடிக்கத்தான் செய்வார். முதலில் வரலாறை ஐயமறப் படியுங்கள். அல்லது பெரியாரை கொஞ்சமாவது படியுங்கள். அவர் என்னவெல்லாம் செய்யாமல் போனார் என்று நினைக்கிறீரோ அதைச் செய்ய முனையுங்கள். இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த பிற்போக்குத்தன அடிப்படைவாத மண்ணில் தோன்றமுடியாத ஒரு சிந்தனாவாதியை விமர்சிக்கும் முன் உங்கள் வரலாற்றறிவை அலசிக்கொள்ளுங்கள். பெரியாருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த உங்கள் முன்னோர்கள் கிழிக்காமல் போனது ஏன் என்பதை எண்ணுங்கள்.

No comments:

Post a Comment