சிலப்பதிகாரத்தை தொகுத்தவர்கள் எவ்வளவு இடைச்செருகலாக இந்து மதம் சார்ந்த தெய்வங்களைப் பற்றிய செய்யுள்களை நுழைத்தார்கள் என்பதை பலர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். "சிலப்பதிகாரம் பொய்யும் புரட்டும்" என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். மேலும் 1526 ல் வந்த பாபர் 1530 ல் இறந்தார். அதற்குப் பிறகு பிறந்த துளசிதாசர்தான் சமஸ்கிருதத்திலிருந்து ராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்தார். அதுவரையில் ராமனொன்றும் இன்றைக்கு மாதிரியான பரபரப்பு வியாபார தெய்வமில்லை. அவர் இந்தளவுக்கு தேசிய நாயகனாய் பிரபலமானதே ஜனசங்கத்தின் அரசியலுக்கு அகப்பட்ட பின்புதான். வால்மீகியினுடையதையும் கம்பர் அப்படியே எழுதவில்லை. நமக்கேற்ப மாற்றம் செய்துள்ளார். சீதையினுக்கும் ராமனுக்குமான முதல் சந்திப்பை விவரிக்கும் கம்பனின் கவியைப் படியுங்கள். விலைமகளுக்கு ஒப்பாய் எழுதியிருப்பார். சீதை 38 வரை திருமணமாகதவள் என்று ஒரு ராமாயணம் சொல்கிறது. அவள் ஒரு அந்தக்கால குப்பைத்தொட்டி குழந்தை. காலம் முழுதும் அவளையொன்றும் கண்ணியமாய் கட்டிக்காக்கவில்லை ராமன். கடைசிக்காலத்திலும் கானகம் அனுப்பினான். அங்குதான் தன் மகன்கள் லவன் குசனைப் பெற்றாள் சீதை. ராமன் ஏகப்பத்தினி விரதனில்லை. ஏகப்பட்ட பத்தினி விரதனாகவே இருந்திருக்கிறான். ஒட்டக்கூத்தருக்கும் கம்பனுக்குமே சில வேறுபாடு. இவை தவிர நிறையபேர் அவரவர் வசதிக்கேற்ப கதை கட்டியிருக்கிறார்கள்.
சிலபல சுவையான கற்பனையுடன் எழுதப்பட்ட கதையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது உங்களுக்கு பக்தியாக இருக்கலாம். எனக்கு அது என்றுமே கதைதான்.
No comments:
Post a Comment