இன்று காலை சத்யஜித் ரே-யின் "காத்மாண்டு கொள்ளையர்கள்" என்றவொரு துப்பறியும் குறுநாவலைப் படித்தேன். அவ்வளவாக பரபரப்பாக இல்லையென்றாலும் கூட கதையின் முடிவு புத்திசாலித்தனமாக இருக்கிறது. "ரே"-யின் ஃபெலூடா துப்பறியும் கதை வரிசையை இப்போதுதான் முதலில் ஆரம்பித்திருக்கிறேன். (இனி தினம் ஒரு குறுநாவல்) இக்கதையில் நேபாளத்தில் தயாரிக்கப்படும் போலி மருந்துகளையும் கள்ள ரூபாய் நோட்டுகளையும் திபெத்திய கைவினைப் பொருட்களினூடாக கொல்கத்தா வழியாக ஹிந்தியாவிற்கு அனுப்பி லாபம் பார்க்கும் கொள்ளைக்கூட்டத்தின் செயல்பாடுகளை மேலோட்டமாக துப்பறிந்திருக்கிறார். மெதுவாக நகரும் கதை இறுதியில் நிறைவாய் இருக்கிறது.
No comments:
Post a Comment