11.5.14

காலம் நேரம்

காலம், பல சமயங்கள்ல உங்கள எதையும் கண்டுக்காம விட்டுரும். நீங்களும் அதை எதுவும் கண்டுக்காம கடந்து போயிக்கிட்டே இருப்பீங்க. ஆனா, அது ஒரு நாளைக்கு எல்லாருக்கும் பரீட்சை வைக்கும். வருசம் முழுக்கும் படிக்கிற படிப்புக்கு பரீட்சை நேரம் சில மணி நேரங்கள் இருக்குற மாதிரி காலமும் நம்மை அடிக்கடியோ இல்ல எப்பவோ ஒரு சமயத்துலயோ கிடுக்கிப்பிடியா பரீட்சை வைக்கும். அது வெக்கிற பரீட்சையில நாம ஜெயிக்காமப் போயிட்டா அதுக்கு முன்னாடி நாம வாழ்ந்த வாழ்க்கையும், அதுக்குப் பின்னாடி நாம வாழப்போற வாழ்க்கையும் அர்த்தமில்லாமப் போகவும் வாய்ப்புண்டு. அப்படியொரு சந்தர்ப்பம் எல்லார் வாழ்க்கையிலும் ஒரு முறையாவது வரும். அது ஒவ்வொருத்தனுக்கும் முக்கியமானது.

No comments:

Post a Comment