15.5.14

நம் ஆதரவால் அவர்களுக்கு என்ன நன்மை?

மதிப்பிற்குரிய "தமிழ்த்தேசிய" உணர்வாளர்களுக்கு..., தமிழனின் பெருமைகளையும் புலிகளின் பெருமைகளையும் தமிழ்நாட்டுக்குள்ளே மட்டும் பேசிக்கொண்டிருப்பதில் பெரிய மாற்றங்கள் ஹிந்திய அளவில் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. நம் அரசியல் முன்னோர்கள் செய்யாமல் விட்டதை நாம் செய்தாக வேண்டும். ஈழப் பிரச்னையை தமிழ்நாட்டுக்கு வெளியே கொண்டு சென்று அரசியலாக்கி கருத்தளவில் மாற்றினத்தாரை ஆதரவாக திசைதிருப்ப தீவிர செயற்திட்டம் வகுத்து செயல்படவேண்டும். தெளிவான வெளியுறவு கொள்கைகளை தமிழ் உணர்வாளர்கள் வகுக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்து தமிழரல்லாதோர் மத்தியில் தமிழீழப் பிரச்னையை கொண்டு செல்ல முனைய வேண்டும். அப்படியான தலைமைகளும் இயக்கங்களும் தீவிரமாக உடனடியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் பொதுவாக உண்மையிலேயே தன் சாதிப்பாசமில்லாத தலைவர்கள் உருவாக வேண்டும். ஹிந்தியா முழுதும் ஈழப்பிரச்னை அறியப்பட்டிருக்க வேண்டும். எல்லா அரசியல் சக்திகளையும் அயல் மாநிலத்தவர்களையும் குறைசொல்லிக்கொண்டும் எதிர்த்துக்கொண்டும் புலிகளுக்கு என்ன நன்மை செய்துவிட முடியும்? ஆங்கில ஊடகங்களையும் வட ஹிந்திய ஊடகங்களையும் தமிழ் உணர்வாளர்கள் ஊடுருவி கைப்பற்ற வேண்டும். திறமையான எழுத்தாற்றலும் தெளிவான நேர்மையான பண்பான தர்க்க ஆற்றலும் கொண்ட ஆங்கில மொழிப்புலமை வாய்ந்த தமிழர்கள் அதிகப்படியாக அமைப்புகளில் கொண்டுவரப்பட்டு எப்போதும் காட்சி ஊடகங்களில் தீவிரமாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழம்பெருமைகள் பேசுவதை நிறுத்திவிட்டு ஈழப்போரில் தமிழர்கள் தோற்றுப்போயிருக்கிறோம் என்பதை மேற்பூச்சு வார்த்தைகளின்றி நேர்மையாக இன்றைய நாளைய தமிழ் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வேறு மொழி தெரிந்த தமிழர்கள் அந்தந்த மொழி நண்பர்களுடன் அவர்கள் மொழியிலேயே பரப்புரை செய்து ஆதரவுத்தளம் அமைக்க செயல்பட வேண்டும். 

ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகள் இல்லாமல் நமக்குள்ளே கருத்து மோதல்களை மட்டும் நடத்திக்கொண்டிருந்தால் புலிகளை நாம் ஆதரிப்பது எந்த வகையில் அவர்களுக்கு உதவும்?

No comments:

Post a Comment