//இலங்கையுடன் நட்பு பாராட்டினால்தான் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும். இல்லாவிடில் எதுவும் செய்ய முடியாது.//
இத்தனை நாளாய் காங்கிரசுக்காரன் சொன்னதை கொஞ்சம் நமோ தேசபக்தி ஊறுகாயை சேர்த்து இப்போது பிஜேபி-காரர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். எப்படி தமிழ்நாடு காங்கிரசு எல்லா தமிழ் விரோத நடவடிக்கைகளுக்கும் முந்திக்கொண்டு அறிக்கைவிட்டு வக்காலத்து வாங்கி டெல்லி தலைமையை காப்பாற்றுமோ அப்படியே இப்போது தமிழ்நாட்டு பிஜேபி-காரர்கள் முந்திக்கொள்கிறார்கள்.
"இந்தியாவும் இலங்கையும் எப்போது எதிரி நாடுகளாக இருந்தது? நட்பாய் இருந்துகொண்டு தமிழர்களுக்காய் என்ன கிழித்தது இந்தியா?"
நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டுதானே 900 மீனவர்களை சுட்டுக்கொன்றார்கள். நேர் எதிரியான பாகிஸ்தானுக்கு எந்த விதத்தில் இலங்கை குறைந்தது? இலங்கை சிங்களர்களில் எவன் இந்தியாவை நட்பாகப் பார்க்கிறான். அப்போதிலிருந்து இப்போதுவரைக்கும் நட்பு என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டு சீனாவுக்கும் பகிஸ்தானுக்கும் சாமரம் வீசி இந்தியாவை தன் அடியாளாய் வைத்துக்கொண்டு காரியம் சாதிப்பதுதானே சிங்களர்களின் ராஜதந்திரம். கார்கில் போரில்கூட பாகிஸ்தான் விமானங்கள் கொழும்பில்தானே எரிபொருள் நிரப்பின. தேசபக்தியைச் சொல்லி ஏமாற்றுவதில் காங்கிரசுக்கு பிஜேபிக்கும் பெரிய வித்யாசமில்லை.
உள்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் என்ன ------க்கு வெளிநாட்டுடன் நட்பு பாராட்ட வேண்டும்?
"ஹிந்தியா இலங்கையுடன் எதிரியானால் மட்டுமே தமிழர்களுக்கு நல்லது. பழைய பஞ்சாங்க லாவணியை மூடிவைத்துவிட்டு இதற்கெதிராய் தீவிரமாய் தமிழ் இளைஞர்கள் இயங்கவேண்டும்."
இலங்கைக்கு நண்பனாய் இருக்கிறேன் என உலக நாடுகளின் முன் காட்டிக்கொள்ளாமல் பொத்திக்கொண்டு இருந்தாலே இந்தியாவால் தமிழர்களுக்கு நன்மைதான். அல்லது "விடுதலைப் புலிகளின் மீதான தடை விலக்கம்" என்றாலே போதும் மீதியை தமிழர்களே பார்த்துக்கொள்வார்கள்.
No comments:
Post a Comment