7.5.14

"ராமன் பாலம்" - உண்மை என்ன?

ராவணனின் தங்கை செல்வி. சூர்ப்பனகை அவர்கள் முதலில் இலங்கையிலிருந்து வருகிறாள். லட்சுமணனுடன் பிரச்னை செய்கிறாள். பின் இலங்கை திரும்பிச் சென்று அண்ணனிடம் முறையிடுகிறாள். பின்னர் ராவணன் இலங்கையிலிருந்து வருகிறார். சீதையிடம் பிச்சை கேட்கிறார். பின் சீதையை கவர்ந்து செல்கிறார். அதன் பின்னர் ஹனுமன் இலங்கைக்கு தூதாக செல்கிறார். அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பி வருகிறார். 

"பாலம் எதுவுமின்றி" இத்தனைப்பேர் இத்தனைமுறை சென்று வந்த இலங்கைக்கு "கடவுள்" ராமனால் போகமுடியவில்லையாம். அதற்கு பாலம் கட்டினார்களாம். அதுதான் ராமன் பாலமாம். 

நீண்டதூரத்திலிருந்து லட்சுமணனுக்காக ஒரு மலையையே பெயர்த்து எடுத்து வந்த திரு.ஹனுமன் அவர்களால், பாலமின்றி வானரப்படைகளை அலேக்காக இலங்கைக்கு தூக்கிக்கொண்டு செல்ல முடியாமல்போனது ஏன்?

No comments:

Post a Comment