16.7.21

OBC - வஞ்சிக்கப்படும் இட ஒதுக்கீடு

இதுவரையில் வாய்ப்பு கிடைக்காத மக்களையே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசவைக்கும் அவர்களின் நரித்தனத்தின் காரணம் இதுதான். தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் என்று பலரும் இன்றும் உண்மை அறியாமல் உளறுகிறார்கள். ஒரு அரசே குறிப்பிட்ட மக்களை முன்னேறவிடாமல் திட்டமிடுவது பெரும் அநீதி. திட்டமிட்டு OBC சமூகம் முன்னேறவிடாமல் தடுக்கப்படுகிறது. அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் BJP பெரும் எதிரி என்பதை இனியாவது இந்து என ஏமாறும் நண்பர்கள் உணர வேண்டும்.

28.05.2020



PAATAL LOK - பாதாள உலகம்

தங்களுக்குத் தெரியாமலே ஒரு கொலை முயற்சி வலையில் சிக்கவைக்கப்பட்டு, அக்கொலை நிகழும் முன்னர் பிடிபடும் நால்வரைப் பற்றி துப்பு துலக்குவதில் கதை துவங்குகிறது.

இந்தியாவில் காவல்துறை செயல்படும் விதம், இந்தியா முழுதும் ஜாதி வெறி நிகழ்த்தும் கொடூரம், நாடெங்கும் தலித்துகள் சந்திக்கும் அவலம், குற்றவாளிகளை உருவாக்கும் நாட்டின் சமூக சூழல், காவல் நிலையங்களில் நடக்கும் ஈகோ மோதல், ஊடகங்களின் கவன ஈர்ப்பு பொய்கள், உறவுகளுக்குள்ளான நிலத்தகராறு, பழி வாங்கல், காவல்துறை உயர் அதிகாரிகளின் மறைமுக அரசியல் சேவை, சமூகத்தின் மீதான இந்திய முஸ்லீம்களின் அச்சம், இந்துத்வ வெறி, வாழவழியற்ற சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவது, மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை அவலம், நாடும் மக்களும் தங்கள் சுகத்திற்காகவே என வாழும் அசலான அரசியல்வாதிகள், தொடர்ந்து கானலாகும் தலித் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு, எதற்கெடுத்தாலும் ISI & பாகிஸ்தான் எனக் கைகாட்டும் இந்திய அரசியல் முகம், வழக்குகளில் விசாரணைகளில் CBI செய்யும் பித்தலாட்டங்கள், சாகடிக்கப்படும் நீதி என சகலத்தையும் துகிலுரிக்கிறது இந்த இணைய தொடர். மொத்தம் 9 பகுதிகள். ஒரே இரவில் முழுதும் பார்த்தேன். இந்த நாட்டில் நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதாக கடைசியில் ஒரு ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஆனால் ஆழ்ந்து கவனித்தால் உண்மை இதுவாகத்தானே இருக்கிறது. ஜாதி, மத, அரசியல், பணம் என்று எந்தவொரு பின்புலமும் இல்லாத ஒரு எளிய மனிதனால் அச்சமில்லாமல் நிச்சயமாக நீதியைப் பெறும் நம்பிக்கையை விதைத்திருக்கிறதா இந்த அரச நிர்வாகம்?
ஜாதி மத சீழ்பிடித்த இந்திய அரசியலின்; காவல்துறையின்; நீதித்துறையின் அசலான நகல் இந்த Paatal Lok. அருமையான ஆக்கம். தயவுசெய்து அனைவரும் தவறாமல் பார்க்கவும்.

27.05.2020

உறங்கும் தி.மு.க

திமுக-வில் கைதுகள் தொடரவேண்டும். உறங்கும் கொள்கைகள் விழிப்புற வேண்டும். முழுநேரப் பணியாளர்களை உருவாக்க வேண்டும். கொள்கை வகுப்புகள் பகுதிதோறும் நடத்தப்பட வேண்டும். பெரும்புள்ளிகளின் சொத்துகள் கட்சியுடைமை ஆக்கப்பட வேண்டும். கட்சியின் நிதி தேர்தலுக்கு அல்லாமல், கொள்கை வளர்க்கவே செலவிடப்பட வேண்டும். நிரந்தர மாவட்ட செயலாளர் மன்னர்கள் மாற்றப்பட வேண்டும். திறமையுள்ள புதிய தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட வேண்டும்.

23.05.2020

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளைக் காணும்போதெல்லாம் ஒரு கணம் நின்று யோசிக்கிறேன். அதிலிருக்கும் வயது அல்லது பிறந்த தேதியை பார்க்கிறேன். இன்னும் வாழ்ந்திருக்கலாமே.., அதற்குள் என்ன பிரச்சினையோ? என்று இரக்கப்படுகிறேன். முன்பின் தெரியாத எவரது இறப்புச் செய்தியைப் பார்த்ததும் மனதில் அஞ்சலி செலுத்துகிறேன். முகநூலில் நண்பராக இருந்து இறந்துபோனவர்களின் பக்கங்களை அவ்வப்போது புரட்டிப் படித்துப் பார்க்கிறேன். எதை நோக்கினும் இயற்கை மீண்டும் மீண்டும் ஒன்றையே நினைவுபடுத்துவதாய் உணர்கிறேன். இந்த வாழ்வு என்பதை மிகையுணர்ச்சியாய் பரிமாற்றம் செய்து உணர்ந்துகொள்ளும் நோய் யாரால் எப்போது தொற்றியது என்றும் யோசிக்கிறேன். 80, 90 காலத்து மின்சாரம் இல்லாத இரவுகளில் வானத்தில் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களில் கடந்த காலங்களின் நிழற்படங்கள் பதிவாகியிருப்பதை உறக்கம் வரா இரவுகளில் உறுதி செய்துகொள்கிறேன். எல்லாக் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளிலும் இருக்கும் முகங்களில் தெரியும் நிறைவேறாத ஆசைகள் & கனவுகள் குறைந்தபட்சம் எனக்கான சுவரொட்டிகளில் இருந்துவிடக்கூடாது என்பதற்காய் வாழ்ந்துவிட வேண்டியிருப்பதை உணர்கிறேன். எந்த வருடமேனும் ஒருமுறை அப்பாவுக்கு கண்ணீர் அஞ்சலி ஒட்டலாம் என்று வைத்திருக்கும் அவரது நிழற்படத்தைப் பார்க்கையில் அவரைவிடவும் என்னைக் குறித்து அதிகம் கவலைப்பட்ட ரேகைகள் பதிவாகியிருப்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். தற்காலிகமாக அவ்வெண்ணத்தைக் கைவிடுகிறேன். அப்பாவின் முகத்தில் தெரியும் கவலை ரேகைகளை அழிப்பது குறித்து சிந்திக்கிறேன். தாயாகி, தந்தையாகி இறந்துபோன எல்லா சுவரொட்டி முகங்களிலும் இதே ரேகைகள் படர்ந்திருப்பதையும் இப்போதுதான் கூடுதலாய் கவனிக்கிறேன்.

23.05.2020

சகோதரி தாணு

இராஜீவ்காந்தி என்பவர் மற்ற சாதாரண அரசியல்வாதிகளைப் போன்ற ஒருவர்தான். ஆஹா ஓஹோ என உருவகம் கொடுத்து தன் பொய் எழுத்துகளால் அவருக்கு யாரெல்லாம் இன்றைக்கு கோட்டை கட்டியிருக்கிறார்கள் என்பதை நன்றாகக் கவனியுங்கள். இவர்களால் தமிழருக்கும் தமிழுக்கும் புல் அளவிற்கும் பயனிருக்கப்போவதில்லை. இவர்கள் தமிழ் மண்ணிற்கு பாரம்தான். போபர்ஸ் ஊழல், போபால் விஷ வாயு கசிவு குற்றவாளியை தனி விமானத்தில் தப்பிக்க வைத்தது என்ற மாபெரும் மக்கள் பணிக்கு உரிய மாமனிதரும் இதே இராஜீவ்தான் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியாமலா இருக்கும்?

இராஜீவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி தமிழர் மீதான வெறுப்பில் யோக்கியக் கூச்சலிடும் சிலர் மறந்தும்கூட இதே இராஜீவை தன் துப்பாக்கி மட்டையால் தாக்கிய சிங்கள இராணுவ நபரைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதோ சாடுவதோ இல்லை. இவர்களுக்கு தமிழர்கள் மேல் தன் வெறுப்பை சொறிந்துகொள்ள தேவைப்படும் காரணங்களில் இராஜீவ் மரணமும் ஒன்று, அவ்வளவுதான்.
கரு.நாகராஜன் என்ற ஒரு சங்கி ஜோதிமணியை தவறாகப் பேசிவிட்டார் என்று சகலரும் கொந்தளிக்கிறார்கள். இந்த கோபம் நியாயமானது. ஜோதிமணி என்ற பெண்மணிக்காக பொங்கும் இவர்களது அறம், உரிமை மறுக்கப்பட்டும் வன்புணர்வு செய்யப்பட்டும் கேட்பாரின்றி அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களின்; மக்களின் விடுதலை கோரும் நியாயத்தை புரியாத மாதிரி ஏன் நடிக்கிறது? 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அப்பாவி நளினியின் உணர்வு ஜோதிமணிக்காவது புரிந்திருக்கிறதா?
ஜோதிமணி போன்றவர்களுக்கு இராஜீவ் கொலை விசாரணையில் நடந்த மோசடிகள் தெரியாதா? சுப்பிரமணிய சாமிக்கு இருந்த தொடர்பு தெரியாதா? நீதியைவிட எல்லாம் தெரிந்தும் கட்சிக்காக மவுனம் காப்பதுதான் அறிவுடைமையா?
இசைப்பிரியாவை; எண்ணற்ற தமிழ்ப் பெண்களை சகலவிதத்திலும் தாக்கிய சிங்கள இராணுவக் கொடூரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் போக்கை மாற்றத் துணிய போதிய அறவுணர்வு எழவில்லையா?
கட்சிக்காக என ஒரு மக்களின் விடுதலைப் போராட்டத்தை புரிந்துகொள்ள முடியாமல்; ஆதரிக்காமல் தொடர்ந்து செக்குமாடாய் தமிழர் விடுதலையை எதிர்க்கும் கட்சியில் இருக்கும் ஜோதிமணிகளுக்கும் கரு.நாகராஜன்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது இதைப்பொருத்தவரையில்?
அறம் உள்ளோர் சகோதரி தாணுவின் தியாகத்தை மதிப்போம்.

21.05.2020

வேலைநீக்கத்தை ஆதரிப்போம்

விகடனில் 176 பத்திரிகையாளர்களை வேலை நீக்கம் செய்கிறார்களாம். வேலை போய்விடுவதால் மட்டும் பிழைக்கும் திறமையே இல்லாதவர்களாக பத்திரிகையாளர்கள் இருக்கமாட்டார்கள். பாதுகாப்பாக இருந்துகொண்டு ஒரு நிறுவனத்தின் நிறத்திற்கேற்ப சகலத்தையும் எழுத்தால் விமர்சனம் செய்துகொண்டிருக்கும் சிறை மனோபாவத்திலிருந்து விட்டு விலகி இனி எதையும் சொந்த அறச்சீற்றத்துடன் சுதந்திரமாக அவர்கள் விமர்சித்து எழுதி இயங்க விடுதலை கிடைத்ததாக எண்ணி, அந்த ஒவ்வொருவரும் அரிய மக்கள் பணியாற்ற ஆதரவு தருவோமாக...!!

21.05.2020

கார்த்திக் டயல் செய்த எண்

 


காதல் என்பது இருவருக்கும் இயல்பாக வருவது. வற்புறுத்தி யாசகம் பெறுவது அல்ல. ஒரு உண்மையான ரோஜா வாடாமல் இருக்க முடியாது. காகிதப் பூக்களால் மட்டுமே எப்போதும் வாடாமல் இருக்க முடியும். அதேபோல் உண்மையான காதல் வெறுக்கப்படாமல் இருக்கவே முடியாது. உண்மையிலேயே காதலிப்பவர்கள்; காதலித்தவர்கள் காதல் கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிடுவர். காதலை முழுமையாக உணராதவன் அல்லது மேலோட்டமாக சிலாகிப்பவனால் மட்டுமே எப்போதும் காதலில் மிதக்க முடியும். எப்போதும் வெறுப்பில்லாத பெண் & ஆண் என்பவர்கள் கற்பனையில் மட்டுமே சாத்தியம். இந்தக் குறும்படம் எல்லோரும் வாழ்வில் சந்திக்கும் ஒரு உணர்வுதான். ஜெஸ்ஸி பேசுவதுதான் அசலான ஜென் நிலை.

21.05.2020

அதிகார மத மூளைகள் கருகாதவரையில் விடிவில்லை

ஏழைகளும் தொழிலாளர்களும் பெரும்பாவம் செய்து வீணாய் பிறந்தவர்கள் எனும் எண்ணமுடன் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அவர்களின் மத மூளை கருகாதவரையில் விடிவில்லை.

21.05.2020

ஜாதிவெறி காட்டுமிராண்டிகள்

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்தவர் கற்பககுமார். இவர் தஞ்சாவூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். சமீப காலமாக சலூன்கடைகளுக்கு ஊரடங்கு காரணமாக அனுமதி இல்லை. கற்பககுமார், மற்ற இடங்களில் மூடப்பட்டுள்ள கடைகளை பார்க்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரி விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அதனால் இவரை அடக்கம் செய்வதற்காக பொது சுடுகாட்டின் தகன மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மாற்று சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசம் ஆனார்கள். தகன மேடையில் எரிக்க வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டையை தூக்கி வீசியெறிந்தனர். இதனால் கீழப்பழுவூர் போலீஸுக்கு விஷயம் தெரிவிக்கப்படவும், அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் இளைஞரை தகன மேடையில் எரிக்க யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்களைதான் சமாதானம் செய்தனர். இன்னைக்கு உங்களை விட்டா, நாளைக்கு இனனொருத்தங்க வருவாங்க.. அப்பறம் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்" என்று மாற்று சமூகத்தினர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் உறவினர்கள் தகன மேடையில் பிணத்தை எரிக்காமல், கீழேயே வைத்து அவசரமாக உடலை எரித்துவிட்டு வந்துவிட்டனர். மறுநாள் அந்த பிணம் பாதி எரிந்து, பாதி எரியாத நிலையில் கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் சென்றது. இதை கேட்டதும், இளைஞரின் தாய் கொதித்தெழுந்தார். பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடாது என்பதையும் மீறி பாதி உடல் மட்டுமே எரிந்த நிலையில் கிடந்த மகனை கண்டு கதறினார். அங்கேயே புரண்டு அழுதார்.. மீதி உடலை பெற்ற தாயே எரித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அந்த தாய் சொல்லும்போது,

"உடலை எரிப்பதற்காக அடுக்கி வெச்ச விறகுக்கட்டைகளை தூக்கி வீசியுள்ளார்கள். அதைத் தட்டிக் கேட்கப் போனால், அந்த விறகுக்கட்டையாலேயே அடிக்க வந்துள்ளனர்.. இது அரசு சுடுகாடுதானே.. எல்லாருக்கும் பொதுதானே என்று கேட்டதற்கு, சாதியை சொல்லி கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார்கள். போலீசுக்கு போயும் பிரயோஜம் இல்லை.. அப்பறம்தான் கீழே வெச்சு எரிச்சிருக்காங்க. மறுநாள் என் மகன் உடம்பு பாதி தான் எரிச்சிருக்குன்னு சொன்னதும் நான் சுடுகாட்டிற்கு ஓடினேன். என்னை நிறைய பேர் போக வேணாம்னு தடுத்தும், மனசு கேக்கல.. அழுதுகொண்டே என் மகனுக்கு கொள்ளி வெச்சேன்.. என் நிலைமை யாருக்குமே வரக்கூடாது" என்றார்.
"எரிக்கிறதனால சாதி அந்தஸ்து குறைஞ்சிடுமா?" என்று இந்த தாய் கேட்ட கேள்விக்கு இதுவரை யாரிடமிருந்தும் பதில் இல்லை.

19.05.2020



தமிழ்ப் போராளிகளுக்கு வீரவணக்கம்...!

ஈழப்போரின்போது உருவான மன அழுத்தம் இன்னமும் நீடிக்கிறது. இவ்வாற்றாமையே பலவற்றின்மீதும் பெருங்கோபமாக மாறுகிறது. நூலறுந்து, மின்கம்பத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க நினைப்பவன் மனம்போல் தமிழர் அரசியல் நிலைகண்டு கவலையுறுகிறது. கேட்பாரில்லாதவர்கள் என்று கொல்லப்பட்ட அத்தனை பேரில் ஒருவருக்காகவாவது பழிவாங்கும் உணர்வை கடமையென விரும்பி சுமந்து மௌனித்திருக்கிறது. கேவலம், தன் ஜாதிவெறிக்காக மட்டும் பிறந்து உண்டு உயிர்வாழும் அற்பர்களுடனும்; அரை வெந்தோர்களின் அரசியல் புரிதல்களுடனும் மல்லுகட்டுவதிலுமே தமிழ் ஊட்டிய அறவுணர்வு கழிகிறது.
உலகில் யூத இனமும் தமிழ் இனமும் அதிகப்படியான துயரங்களைச் சந்தித்திருக்கிறது. தன் அனுபவத்திலிருந்து மீண்டு யூத இனம் தற்போது பாதுகாப்படைந்துவிட்டது. தமிழ் இனம் மட்டும் இன்னமும் ஜாதி; மதம்; கட்சி; அடிமைப்பதவி உணர்வுகளிலேயே தம் ஆற்றல் இழந்துகொண்டிருக்கிறது. பாவேந்தன் பாரதிதாசன் தமிழருக்காகக் கண்ட பெருங்கனவு பலிக்கும் அந்த ஒருநாள் வரலாற்றில் வரத்தான் போகிறது.
தமிழர் உரிமைக்காய் தங்களை ஈகம் செய்த அத்தனை எம் சகோதர சகோதரிகளுக்கும் எனது தலைதாழ்ந்த வீரவணக்கம்...!!!

18.05.2020



எதன் அடிப்படையில் ஒதுக்கீடு?

ஜாதி அடைப்படையில் எதிலும் ஒதுக்கீடு கூடாது, திறமை அடிப்படையில்தான் ஒதுக்கீடுகள் வேண்டும் என்று பேசுபவர்கள், பிறவி அடிப்படையில் அல்லாமல் திறமை அடிப்படையில் யார் வேண்டுமானாலும் கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதற்கு போராட வருவதில்லையே ஏன்? இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பார்ப்பனர்கள் அர்ச்சகர் வேலைக்கு மட்டும் பார்ப்பனர் அல்லாதவர்களை எதிர்ப்பது ஏன்?

18.05.2020

சைக்கோ அறிவாளி ஸ்டாம்பு சித்தன்

சைக்கோக்கள் நாடாள்வதைப் புரிந்துகொண்டு பதிவிட்டுள்ளார் டான் அசோக் எனும் ஸ்டாம்பு சித்தன் பேரறிவாளி. இந்தப் பதிவு நியாயமானதுதான். இதை விமர்சிக்க ஏதுமில்லை. அதேவேளை, ஈழப்போராட்டத்தையும் தமிழீழப் புலிகளையும் தலைவர் பிரபாகரன் அவர்களையும் தொடர்ந்து தரமற்று விமர்சித்து வரும் சைக்கோத்தனம் நிர்மலாவைப் போன்றே தன்னிடமும் இருப்பதை மட்டும் உணராமல் எப்படி இருக்க முடிகிறது இந்த சைக்கோவால்?

17.05.2020


மனநோய் கார்ட்டூனிஸ்ட்கள்

திருமாவைப் பற்றி மிகவும் தரக்குறைவாக கார்ட்டூன் வரைந்து தன் மனநோயை வெளிக்காட்டியுள்ளான் வர்மா எனும் ஒருவன். அவனுக்கு உண்மையிலேயே அரசியல் அக்கறையும் அறிவும் இருக்குமென்றால், தன் ஜாதி என்ற ஒரே காரணத்திற்காக அவன் யாரை தன் தலைவனாக எண்ணி இதுவரை ஆதரித்துக் கொண்டிருக்கிறானோ அவர்களின் நாக்கிற்கு முன்பும் பலபேரின் ஷூக்களைப் போட்டு ஒருமுறையாவது படம் வரைந்திருப்பான். இவனை இதனால் ஆதரிப்பவர்கள், இதே வகை மனநோயாளிகளாக மட்டுமே இருக்கமுடியும்.

17.05.2020

நீதிக்கு இலக்கணம் என்ன?

ஓரே வழக்கிற்கு உயர்நீதி மன்றம் தடை போடுகிறது. உச்சநீதி மன்றம் தடையை விலக்குகிறது. நீதி என்பது நீதிபதிகளைப் பொருத்து மாறக்கூடியதா? நீதிக்கு நிலையான இலக்கணம் இல்லையா?

15.05.2020

பேரறிஞர் அண்ணா

"பேரறிஞர் அண்ணா யார்?" என்பதைப் பற்றி புதிய கோணத்தில் விவாதிக்கும் இக்காணொளியைத் தவறாமல் பாருங்கள்.

பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிட இயக்க கொள்கைகள் & வரலாறு பற்றியும் தெரியாத இளைய தலைமுறையினர் பலரும் இன்றைக்கு திமுக கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. கட்சியின் உயர் பொறுப்பிலும் பதவிகளிலும் இருப்பவர்களுக்குக்கூட இவை தெரியாமலிருப்பது காலக்கொடுமை. காங்கிரஸ் பண்ணையார்களை எதிர்த்து வளர்ந்த எளிய மக்களின் கட்சி இன்றோ குறுநில மன்னர் பரம்பரை போல வாரிசு அரசியலால் சீரழிகிறது. பணம் இருக்கிற ஒரே காரணத்தால் பல பெருச்சாளிகள் பதவிகளில் இருந்துகொண்டிருக்கின்றனர். ஒரே ஆளே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் மாவட்ட செயலாளராய் இருக்கும் அவலமும் தொடர்கிறது. இதை யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை. இன்றைக்கு டி.ஆர். பாலு & தயாநிதி மாறன் பேசியிருப்பது படுகேவலம். இவர்களெல்லாம் கட்சியில் இருக்கவே தகுதியில்லாதவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் ஜாதி வெறியுடன் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். திமுக ஆதரவாளர்கள் யாருக்கேனும் உண்மையிலேயே கட்சியின் மீதும் கொள்கைகளின் மீதும் பேரறிஞர் அண்ணாவின் மீதும் மதிப்பு இருந்தால் உட்கட்சி குறைகளை வெளிப்படையாக விமர்சியுங்கள். அல்லது பொதுமக்களின் அக்கறையான விமர்சனங்களை கட்சியின் மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லுங்கள். இல்லையேல் கட்சியின் எதிர்காலம் போகப்போக தேய்பிறை மட்டுமே என்றாகிவிடும். இன்னொரு பெரிய கட்சியின் மீதான வெறுப்பில் கிடைக்கும் வாக்குகள் எல்லாம் கட்சிக்கு ஆதரவானதாகப் புரிந்துகொள்வது தவறு. இதை ஆரம்பகால திமுக மேடைகளில் பேரறிஞர் அண்ணாவே குறிப்பிட்டு பேசியுள்ளார்.


15.05.2020

கொரோனாவுடன் வாழப் பழகுவோம்

உன்ன மாதிரி பசங்க வீட்டையும் மதிக்காம, சட்டத்தையும் மதிக்காம வெளிய சுத்தும்போது நீ மட்டும் ஏன் இன்னும் வீட்லயே அடைஞ்சி கெடக்குற?

வெளிய போனா கொரோனா வந்துரும்னுதாம்ப்பா...

அதான் கவர்ன்மெண்ட்டே சொல்லிடுச்சே, கொரோனாவோட வாழ பழகிங்கங்கன்னு. அப்புறம் என்ன?... வேற எங்க எப்டி பழகிக்குவ?

14.05.2020



சிந்திப்பதே தேச விரோதம்

பிரதமர் மோடி பேசுனதைக் கேட்டிங்களாண்ணே, உங்களுக்கு என்ன தோணுது?

தமிழ்நாட்டுக்கு பிரதமர்னு ஒருத்தர் தேவையே இல்லன்னு தோணுது...
இப்டி சொன்னா தேசவிரோதம்னு சொல்லுவாங்களே...
இங்க யோசிச்சாலே தேசவிரோதம்னு மாறி ரொம்ப நாளாச்சிங்க தம்பி...

12.05.2020



தண்டனைகள் கடுமையாகட்டும்

#Justice_for_Jayasree

ஒரு சிறுமியைக் கொளுத்தும் இதே மாதிரியான மனநிலை கொண்டவர்கள்தான் பெரும்பாலும் காவல் நிலையம், நீதிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கட்சிப் பொறுப்புகள் என்று எங்கும் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு அரசின் மீது கடும் அச்சம் வருகிறபடி சட்டங்களை கடுமையாக்க வேண்டும். தண்டனைகளை நாடறிய அனைவரும் பார்க்கும் வண்ணமும்; மக்கள் என்றைக்கும் மறக்காதபடியும் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா என்றால் மிகவும் சாத்தியம்தான். இதை சாத்தியமாக்குகிற எண்ணம் கொண்ட எவனும் இன்னும் தலைமைப் பதவிகளில் அமரவில்லை என்பதே நிதர்சனம். இந்த சம்பவத்திற்கு வழங்கப்படும் தண்டனை இதே போன்று இனி நிகழாமல் இருப்பதற்கான கடைசி தண்டனையாக இருக்க வேண்டும்.

11.05.2020

ஆணவம் பிடித்த ஒன்றியம்

Government Of India (P) Ltd.

இந்த ஹிந்திய அரசு விளம்பரத்தில் தமிழ் மொழி திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தியா ஏன் தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் கொண்டுள்ளது? தமிழகத்திற்கே சோறு போடும் தஞ்சை காவிரி டெல்டாவை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது? இந்திய தேசபக்தி என்பது சிந்திக்கும் அறிவுள்ள தமிழர்க்கு அழகா?

எவ்வளவு ஆனவம் இருந்தால் அதை தமிழிலேயே விளம்பரப்படுத்தி இருப்பார்கள். இதெல்லாம் இன்றைக்கோ நேற்றோ தீட்டிய திட்டம் மாதிரி தெரியவில்லை. பல வருட வெறி, பழிக்குப் பழி வாங்குகிற மாதிரிதான் தெரிகிறது. ஒரு இன அழிப்பின் தொடக்கம் அல்லவா?, அதன் மொழியை முடக்க முயல்வது.

10.05.2020


திரைப்பட சங்கங்கள்

"ஷாட் ரெடி" என்று சொன்னதும் உடனே கிளம்பி படப்பிடிப்பு தளத்திற்கு வரும் தொழில் நேர்மை இல்லாமல் வாடிக்கையாக இருக்கும் பலரில் சிலர் சம்பளம் வேண்டாம் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. எனினும் இதை வரவேற்றாக வேண்டியதுதான். நாலைந்து படங்களில் சிறிதாய் தலைகாட்டி பின்னர் பெயர் தெரியும்படி ஆகிவிட்டால் சிலருக்கு கொம்பு முளைத்துவிடுகிறது. தன்னால் ஒரு நிமிடமும் தாமதமாகிவிடக்கூடாது என்று நினைக்கும் தொழில் நேர்மை சிலரிடம் மட்டுமே இருக்கிறது. விகிதளவில் இது மிகவும் குறைவு. இயக்குநரையோ தயாரிப்பாளர்களையோ இவர்கள் மதிப்பது பிறகு இருக்கட்டும், முதலில் தொழிலை கொஞ்சமாவது மதிக்கும் பழக்கத்தையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும் இந்த சிலர். பழம்பெரும் நடிகர்கள் எல்லோரிடமும் இந்த பண்பும் குணமும் திறமையும் அதிகம் இருந்தது என்று படிக்கும்போது அவர்களை இன்றும் மிகவும் மதிக்கத் தோன்றுகிறது. பிற மாநில திரைப்பட சங்கங்கள் கடுமையான விதிகளுடன் கட்டுக்கோப்பாய் இயங்குகிறது என்பதை கேள்விப்படுகையில் பொறாமையாகத்தான் இருக்கிறது. பொதுவாக சங்கப் பொறுப்புகளை ஏற்க வருபவர்களுக்கு தொலைநோக்குப் பார்வையும் சுயநலமற்ற சேவை மனப்பான்மையும் விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்கும் போக்கும் இருந்தால்தான் அதுசார்ந்த துறை கட்டுக்கோப்பாய் விளங்கும். இங்கிருக்கும் சங்கங்களோ எதற்கு உருவானதோ அதைத்தவிர பிற வேலைகளை திறமையாகச் செய்துகொண்டிருக்கிறது. இதனால் தொழில் நேர்மை இல்லாதவர்களுக்கு எந்த சங்கத்தின் மீதும் எப்போதும் அச்சமில்லை. எந்த குறைகளையும் கட்டுப்படுத்தும் வலு எந்த சங்கத்திடமும் காணவில்லை.

09.05.2020



காட்டுமிராண்டிகள் இப்போதும் மாறவில்லை

"சூரியன் என்பதே ஒரு நட்சத்திரம்தான். நம் பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனைப் போலவே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பல கிரகங்கள் சுற்றி வரலாம். அவற்றிலும் நம்மைப் போலவே சிந்திக்கத் தெரிந்த ஜீவராசிகள் இருக்கலாம்"

- இப்படி 16 -ம் நூற்றாண்டிலேயே எடுத்துச் சொன்ன வானவியல் விஞ்ஞானிதான் ஜியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)
இத்தாலியின் நோலா நகரில் 1548 ம் ஆண்டு பிறந்தவர். 24 வயதில் பாதிரியாராகிறார். ஆனாலும் பின்னாளில் கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் செலுத்துகிறார். மேற்குறிப்பிட்ட இக்கருத்தைச் சொன்னதற்காக இவருக்கு மதவாதிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
இவரது கழுத்தைச் சுற்றி வெடிகுண்டுப் பொடிகள் தூவப்பட்டன. நாக்கு, தாடையுடன் சேர்த்து ஆணியடிக்கப்பட்டது. அவரைச் சுற்றி மரக்கட்டைகளையும், குச்சிகளையும் குவித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இவரது அறிவியல் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்களால், இவர் இறந்து 7 வருடம் கழித்து நோலாவில் புரூனோவுக்கு சிலை வைக்கப்பட்டது. சந்திரனில் காணப்படும் பள்ளத்தாக்குகளில் ஒன்றுக்கு ‘ஜியார்டானோ ப்ரூனோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
***
அறிவியல் கருத்துகளை உள்வாங்கவும் பரப்பவும் செய்து மக்கள் சிந்திக்க வழிவிடுவோம். மதக்கருத்துகளை கேள்வி கேட்க அனுமதிப்போம். பொய்யானவைகள் சாகட்டும், உண்மைகள் நிலைக்கட்டும்.

09.05.2020



பக்கச்சார்புள்ள சட்டமும் நீதியும்

தன்னை நேசித்த பெண்ணை பாதுகாக்கப் போராடியவனை நாடகக் காதல் செய்தான் என்று ஒருவனை தண்டவாளத்தில் தலை சிதறக் கிடத்திய இந்த சமூகமும் சட்டமும் நீதியும்..., நூற்றுக்கணக்கான பெண்களை காதலிப்பதாக திட்டமிட்டு ஏமாற்றி அவர்களை தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களோடு அப்படி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை கறந்ததும் மட்டுமல்லாமல் அது பற்றிய எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி Style ஆக விரல்களால் Heartin விடுவதும் என சுற்றியவனின் மயிரைக்கூட தொடாமல் கடந்து செல்வதை பார்க்கிற போது சமூகமும் நீதியும்தான் எவ்வளவு கேவலமாக இருக்கிறது?

07.05.2020


நிவாரணங்கள் எதற்கு?


விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு. 3 கிமீ தூரத்திற்கு பரவியது. சாலைகளில் வீடுகளில் ஆங்காங்கே 5000 பேர் மயக்கம். இதுவரையில் 8 பேர் மற்றும் கால்நடைகளும் பலி. இந்த விஷவாயு கசிவினால் உயிர் இழந்தவர்களுக்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூபாய் 1 இலட்சம் நிவாரணம் என்றும் அறிவித்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன். பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் இந்த நிவாரணத் தொகைகள் பற்றி என்ன நினைப்பார்கள்? நிவாரணங்கள் எதற்காக கொடுக்கப்படுகிறது? அரசின் தவறுகளை மூடி மறைக்கவும், மக்கள் அதை மேலும் கிளறாமல் மறக்கவும், அனைத்து மக்களின் கோபத்தை திசை திருப்பவும் இவைகள் ஆளும் தரப்பிற்கு உதவி செய்கிறது. எந்த பாதிப்புக்குப் பின்னரேனும் நடந்த தவறுகள் அல்லது குற்றங்கள் மீது அரசு ஏதேனும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்த வரலாறு இருக்கிறதா? 

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் இப்படியான இரசாயன ஆலைகள் இருக்கக்கூடாது என்று நிவாரணம் பெற்ற பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இனி போராட வாய்ப்புண்டா?

07.05.2020

"கொரோனா தற்கொலைப் படை"

இன்று எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனையானது என்பது நாளைதான் தெரியுமாம். ஆனாலும் சுமாராக 100 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். 5 மணிக்கு மேல் 'ப்ளாக்'கில் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கும்?

உயிரைக் கொடுத்து தமிழக அரசைத் தூக்கி நிறுத்தத் தயாராய் களத்தில் நிற்கும் "கொரோனா தற்கொலைப் படை"
வீர வணக்கம்..!
வீர வணக்கம்..!!

07.05.2020



15.7.21

சிட்சோர் - உள்ளம் கவர்ந்த கள்வன்



ஒரு மொழியில் வெளியான படம், இன்னொரு மொழியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுவிட்டால் எந்த விமர்சனமும் எழாது. ஆனால் தோல்வியைத் தழுவினால் பொதுவாக இரண்டுவிதமான விமர்சனம் எழும்.
திரைக்கதையை மாற்றம் செய்யாமல் அப்படியே எடுத்திருந்தால், "நமக்கு ஏற்றபடி மாற்றி எடுத்திருக்க வேண்டும்" என்பது ஒன்று. அப்படி திரைக்கதையை மாற்றம் செய்து எடுத்திருந்தால், "அதை அப்படியே எடுத்திருக்க வேண்டும். மாற்றுகிறேன் என்று கெடுத்திருக்கக்கூடாது" என்பது இன்னொன்று.
வங்க எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சுபோத் கோஷ் நாவல் (கதை), பாசு சட்டர்ஜியின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் 1976 ம் ஆண்டு ஹிந்தியில் "சிட்சோர்" என்ற திரைப்படம் வெளியானது. இதன் கதையை மட்டும் தழுவி திரைக்கதையை முற்றிலும் மாற்றம் செய்து தமிழில் பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனத்தில் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கத்தில் 1987 ம் ஆண்டு "உள்ளம் கவர்ந்த கள்வன்" என்ற திரைப்படம் வெளியானது.
இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டாவது விமர்சனமே தோன்றியது.

07.05.2020

அம்பேத்கர் மீதான வசுமித்ரவின் விமர்சனம் குறித்து...

"புத்தரின் ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கர்" என்ற வசுமித்ரவின் விமர்சனம் குறித்து...

*
எல்லோரையும் விமர்சிக்கலாம்தான். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இப்படி தேடி எடுத்து அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் நோக்கிலேயே செயல்படுவது எல்லாம் உள்நோக்கம் கொண்டவையாகவே தெரிகிறது. இப்போது இதனால் இவ்வாறாக அம்பேத்கரை விமர்சித்து ஆகப்போவது என்ன? வசுமித்ரவின் நோக்கம் என்ன? இதற்கு அவரது 1000 பக்க நூலைத்தான் வாசிக்க வேண்டும் என்பது ஆணவம். சமூக அக்கறை கருத்து உள்ளவர்களிடம் பணிவு இருக்க வேண்டும். அம்பேத்கர் ஒரு சாதாரண ஆள் என்று நிறுவத் துடிக்கிறாரா வசுமித்ர? பல ஒடுக்குமுறைகளை சந்தித்த ஒரு சமூகம் கொண்டாடும் பெரிய அடையாளத்தையே நோண்டிக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? மார்க்சிய கண்ணோட்டத்துடன் பிற சமூகங்கள் கொண்டாடும் ஒவ்வொரு அடையாளங்களையும் எழுதுவாரா வசுமித்ர? முற்போக்குப் போர்வையில் தன் சுயவெறுப்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளாகவே இவை தெரிகிறது. முதலில் தான் சார்ந்த ஜாதியின் பிம்பத்தை விமர்சிக்க இவரது பரந்த மார்க்சிய அறிவு உதவினால் நல்லது.

07.05.2020

தமிழர் வெறுப்பு கருத்துரிமைப் போராளி "ஸ்டாம்பு சித்தன்"

தலைவர் பிரபாகரன் அவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி எழுதிக்கொண்டிருப்பவன் டான் அசோக். 'ஸ்டாம்பு சித்தர்' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவதும் இவனே. ஆஸ்திரிய நாட்டு அதிபரும் இவனும் ஒன்றாக கோலி விளையாடியவர்கள். இந்த ஆழமான நட்பின் அடிப்படையில்தான் கலைஞருக்கு ஆஸ்திரிய அஞ்சல் தலையை சென்னையில் வெளியிட்டான். பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வெளியிடலாம் என்பதை கலைஞரிடமே மறைத்த திறமை கொண்டவன். இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த இவன் கருத்துரிமை என்ற பேரில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறான். தன் உண்மை அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கலைஞர், திமுக, பெரியார், திராவிடம் 2.0 என்று பல வேடங்களை அணிந்துகொள்கிறான்.

இந்த ஸ்டாம்பு சித்தரின் தாத்தா ஆந்திராவில் சிட்டுக்குருவி லேகியம் விற்று பிழைப்பு நடத்தி இருந்திருக்கலாம். வருமானம் இல்லாமல்போன ஒருசமயம் தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்திருக்கலாம். அப்போது யாரோ ஒரு தமிழர் அந்த லேகியம் ஏமாற்றுத்தனமானது என்ற உண்மையைக் கண்டுபிடித்து அவரை நையப் புடைத்திருக்கலாம். அதில் பற்கள் உடைந்து முகம் கோணலாகி இருக்கலாம் இந்த ஸ்டாம்பு சித்தனின் தாத்தாவிற்கு. அவர் சாகும் தருவாயில் தன்னை அடித்தவரை பழிவாங்க வேண்டும் என்று இந்த சித்தனிடம் சத்தியம் வாங்கவே, அதிலிருந்து மறைமுகமாக தமிழர் மேல் இவன் வன்மம் கக்கி வருவதாக இருக்கலாம். இதனால்தான் கருத்துரிமை என்ற பெயரில் இப்படி தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கலாம் ஸ்டாம்பு சித்தன். சிங்களத் தரப்பிற்கு மாமா வேலை பார்க்கும் எழுத்தில் தங்கள் தமிழ் வெறுப்பு சுய அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் இதுபோன்ற லேகியப் பரம்பரை ஒட்டுக்குழுக்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருப்பது இவனுக்கு வசதியாக இருக்கிறது. அவர்களுக்கும் இப்படியான பல குத்துப்பட்ட வரலாறுகள் இருப்பதால் சித்தனுக்கு தொடர்ந்து ஒத்தூதி வரலாம். இதை நம்பாதவர்கள் ஸ்டாம்பு சித்தனிடமே அவரது இந்த லேகிய வரலாற்றைப் பற்றி விசாரித்தால் ஏதேனும் ஒரு உண்மை அறிந்து கொள்ளலாம்.
தூங்கிக் கிடக்கும் தமிழர்களைத் தட்டியெழுப்ப மட்டும் இந்த ஸ்டாம்பு சித்தனின் பணியை நாம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருப்போம்.
தொடர்க ஸ்டாம்பு சித்தனின் கருத்துரிமை...!!!

06.05.2020

ரொம்ப தவறுங்க

டாஸ்மாக் திறக்கக்கூடாது என்று விமர்சிக்கும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.......

கோயிலைத் திறந்தால் இந்து மட்டும்தான் செல்வான். மசூதியைத் திறந்தால் முஸ்லீம் மட்டும்தான் செல்வான். தேவாலயத்தை திறந்தால் கிறித்தவன் மட்டும்தான் செல்வான். ஆனால் டாஸ்மாக்கைத் திறந்தால்...?
ஒரே கல்லில் இத்தனை மாங்காய் அடித்திருக்கும் இந்தத் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்துகொண்டு விமர்சனம் செய்யுங்கள். இதுபுரியாமல் விமர்சிப்பது 'ரொம்ப தவறுங்க'

05.05.2020



நம்பினால்தான் சோறு

"30 ரூபாய் விலையுள்ள பெட்ரோலை ஏன் இவ்வளவு அநியாய விலைக்கு விற்கிறோம் தெரியுமா? சுற்றுசூழல் மாசுபடாமல் இருக்க நீங்கள் அனைவரும் மின்சார வண்டிகளுக்கு மாறுவீர்கள் என்பதற்காகத்தான். நேரடியாக அறிவுரை செய்தால் கேட்பீர்களா? இந்த மோடி எது செய்தாலும் அதில் ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்கும்..."

05.05.2020



திமுக IT wing பரிதாபங்கள்

டாக்டர் இதயம் ரொம்ப வேகமா லப்டப்னு துடிக்குது டாக்டர்...

எதையாவது நெனச்சி ரொம்ப பயந்திருப்பிங்க...
ஆமா டாக்டர், கொரோனா வந்துருமோன்னு பயமா இருக்குது டாக்டர்...
கவலைப்படாதிங்க. நாம மோடியோட ஆட்சியிலயும், எடப்பாடியார் & பன்னீரார் ஆட்சியிலயும் வாழ்ந்துகிட்டிருக்கோம்... பயப்படாம தைரியமா இருங்க.
எனக்கு அடிக்கடி வர்ற பயமே இதான் டாக்டர்... இதுக்கு ஏதாவது மருந்திருக்கா?
மனசைத் தேத்திக்குங்க. திமுக-வுல இருக்குற சில உருப்படாத கூலி அறிவாளிங்கயெல்லாம் தீவிரமா தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்துறதுலயே குறியா இருந்து ஸ்லீப்பர் செல்லா வேலை பார்க்கிறதால, நீங்க தொடர்ந்து இந்த புண்ணியவான்களின் ஆட்சியிலயே வாழ 100% வாய்ப்பிருக்கு.

05.05.2020



சென்னையில் தடை

சென்னையில மட்டும் டாஸ்மாக்கை தொறக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்...

05.05.2020



தமிழர்களைப் பிடிக்காத ஐ.ஏ.எஸ்.கள்..?

கேரளாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திவிட்டார்கள். கொரோனா பரவல் தடுப்பில் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை சொல்லும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் எல்லாம் தமிழகத்தைப் பிடிக்காதவர்களாக இருப்பார்களோ...!





இப்படியெல்லாம் யோசித்து ஆலோசனை சொல்பவர்களுக்கும் சட்டம் போடுபவர்களுக்கும் முறையாக நுகர்வோர்களின் பணத்திற்கு டாஸ்மாக்கில் சீட்டு கொடுக்கும்படி ஆலோசனையோ உத்தரவோ போட முடியாமலிருப்பது ஏன்?

"விலைக்கு மேல் கூடுதல் பணம் வாங்கக்கூடாது"
"விலைக்குரிய சீட்டு கொடுக்க வேண்டும்"

இப்படியான உத்தரவு எல்லாம் எப்போது வருமோ?

05.05.2020

மே 7 ல் டாஸ்மாக் திறப்பு

 


என்னாது கர்நாடகாவுல ஒரே நாள்ல ஒயின் ஷாப்ல 45 கோடி வசூலா? வர்ற 7 ந்தேதி எங்களோட ஆட்டத்தை பார்க்கத்தானே போற...!!

05.05.2020

டாஸ்மாக் சாணக்கியர் எடப்பாடி

 நம்ம முதல்வர் எடப்பாடியார் ஒரு அரசியல் சாணக்கியர்டா...

எப்படிடா சொல்ற?
படிப்படியாக மூடபடும்னு சொன்னாரு. ஆனா வழக்கமா 12 மணிக்கு தொறக்குற டாஸ்மாக்கை சைக்கிள் கேப்ல இப்ப காலை 10 மணிக்கே தொறக்க உத்தரவு போட்டுட்டாரு இல்ல...!
அதான் 5 மணியோட மூடிடுவாங்களே
அதுக்கு மேல ப்ளாக்குல விக்க கூடுதல் நேரம் இருக்குது இல்ல...

05.05.2020


மருத்துவர்களுக்கு இதுதான் மரியாதையா?

"செத்த பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள் கத்துங் கணக்கென்ன கயிலாபுரிநாதா" என்றார் பட்டினத்தார்.

போதிய நிதியையும் மருத்துவ உபகரனங்களையும் தேவையான செவிலியர்களையும் நியமிக்காமல் வெறுமனே கொரோனாவை ஒழிக்க போராடும் மருத்துவர்களைக் கவுரவிக்கிறோம் என்று இந்திய ராணுவம் பூத்தூவும் இப்படத்தைப் பார்த்ததும் இவ்வரிகள்தான் நினைவுக்கு வந்தது. நோயாளிகளுக்கு அரசு உதவுகிறதோ இல்லையோ முன்னரே பூத்தூவி விடுகிறார்கள். என்னே பா.ஜ.க-வின் தொலைநோக்கு செயல்?... கூடவே அரிசியும் தூவினால் பொருத்தமாக இருக்கும். எப்போதும் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதற்குமேல் உலகில் எந்த அரசால் என்னதான் செய்துவிட முடியும்?. ஒன்று மட்டும் தண்டமாய் இருந்தால் பரவாயில்லை, இந்த நாட்டிலே ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை அறிவாளிகளாக அல்லவா இருக்கிறார்கள்..!

03.05.2020

திமுக IT wing-ல் சிங்களர்கள்?

எல்லா கட்சியிலும் IT wing என்ற ஒன்று இருக்கிறது. இவை அந்தந்தக் கட்சித் தலைமை ஆட்சிக்கு வரவே உழைப்பார்கள். ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதில் திமுக IT wing -ற்கு விருப்பமில்லை போல. ஏனோ எடப்பாடி ஆட்சியே மீண்டும் தொடர உழைக்கிறார்கள். தன்னுடைய தொடர் தோல்விக்கு ஈழப் பிரச்சினையைக் கையாண்டதும் ஒரு காரணம் என்பதை இன்னும் உணரக்காணோம் இந்த இணையதள பொறுப்பு அறிவாளிகள். தலைவர் பிரபாகரன் மீதான விமர்சனத்தில் 'கொள்கை' என்று பொய் பேசி உளறும் தமிழ் வெறுப்பு கொண்ட கூலி அறிவாளிகளின் வாயை அடக்குவது தலைமைக்கு நல்லது. இல்லையேல் எடப்பாடியார் நிகழ்காலப் பெருந்தலைவர் ஆவதில் சிறிதும் மாற்றமில்லை.

மேலும், டான் அஷோக் & தர்மபுரி எம்.பி & முகநூலில் போலி பெயர்களில் திமுக அடையாளத்துடன் புலிகள் மீது வன்மத்தை வெளிப்படுத்தும் இன்னபிற கூலி அறிவாளி நபர்களை உற்று நோக்கினால் ஒரு உண்மை புரியும். பெரியாரின் பின்னால் மறைந்துகொண்டு இந்தத் திராவிடப் பார்ப்பனர்கள் நெடுநாட்களுக்கு தமிழர்களை ஏமாற்றிவிட முடியாது. வலுவற்ற மக்களின் பக்கமே நிற்பேன் என்ற பெரியாரின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதியற்றவர்கள் இந்த கிருமிகள்.

02.05.2020



60 அழகிகள் யாரோ?

தற்போது நான் பணிபுரியும் திரைப்படத்தைப் பற்றி இன்றைய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி. மீதி அந்த 60 அழகிகள் யாராக இருக்கும்?...

01.05.2020



பாஜக-வின் ஹிந்து விரோதம்

Is entrance exam required for arts and science education too? What is their real plan? What else they expect from the more academically disadvantaged Hindus and others?

29.04.2020



பாஜக அரசின் நல்ல குணம்


இந்த செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. ஒருவேளை உண்மையாக இருந்தால், தாங்கள் பதவிக்கு வர நன்கொடையாகவும் மறைமுகமாகவும் பலவகைகளில் செலவு செய்து உதவிய முதலாளிகளுக்கு வெறும் வார்த்தையில் சொல்லாமல் இவ்வாறாக நன்றி காட்டும் அரசின் நல்ல குணத்தைப் பாராட்டுவோம்.

29.04.2020

 

ஜோதிகா சொன்னதில் என்ன தவறு?



 29.04.2020

தமிழரல்லாதோரின் தெளிவு

தமிழனுக்கு அறம் போதிப்பதில் தமிழரல்லாதோர் மட்டும் மும்முரமாய் முன்னனியில் நிற்கிறார்கள். தமிழன் காட்டுமிராண்டியாக இடையில் கொஞ்சம் இல்லாமல் போனது தவறென்றே தோன்றுகிறது. இலக்கிய வளமும் பகுத்தறிவும் தமிழனைத் தொடர்ந்து அமைதியாகவும் ஏமாளியாகவும்தான் இருக்க வைக்கிறது எனில் இவைகளைக் கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைப்பதில் தவறில்லை.

28.04.2020