1.7.21

கற்க கல்வி அறக்கட்டளை - 2020


மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு...
🙏

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ் வழியில் பயிலும் 2000 மாணவர்களுக்கு நாளை கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற உள்ளது. இயன்றோர் வாருங்கள். இயலாதோர் பகிருங்கள்.
***
“கற்க கல்வி அறக்கட்டளை" தமிழ்வழிக் கல்வி உதவி மையம் சார்பாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும் கல்விப் பணிகளின் விவரம் :
தொடக்கம் : 10-05-2013
01. ரயில்வே (RRB) loco pilot தேர்வு சிறப்பு இலவசபயிற்சி – 2014
02. குடிமைப்பணி தேர்வுக்கு எழுதும் மாணவர்களுக்கு study circle –2015
03. உதவி ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறை தேர்வு – இலவச பயிற்சி வகுப்பு –2015
04. அஞ்சல்துறை தேர்வு (postal dept ) - இலவச பயிற்சி வகுப்பு – 2015
05. 2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் மஞ்சைமகத்து வாழ்க்கை பள்ளி சீரமைப்பு - 2016
06. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - இலவச பயிற்சி வகுப்பு –2016
07. 2016 புயலால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி சீரமைப்பிற்கு தொகை 65,000 ரூபாய் மற்றும் 35,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. - 2016
08. குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளி smart class –2017
08. துரைப்பாக்கம் கண்ணகிநகர் சிறுவர்களுக்கு மாலை நேர தனிப்பயிற்சி வகுப்புகள் –2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.
09. வியாசர்பாடி கன்னிகாபுரம் பள்ளி மாணவ மாணவியர்க்கு தனிப்பயிற்சி -2016ல் இருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழ் மொழி வளரவும், தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவும், எளியோருக்கு உதவும் நல்லெண்ணமும் கொண்ட சமூக அக்கறையாளர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
*2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள்...*
06.09.2017 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 320 பேர்கள், சென்னை மாநகரட்சி மாணவர்கள் 350 பேர்கள்.
17.09.2017 அன்று கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாமில் 350 மாணவர்கள்.
புழல் அகதிகள் முகாமில் 250 மாணவர்கள்.
10.10.2017 அன்று பெருஞ்சித்திரனார் அவர்களின் மகள் பொற்கொடியம்மாள் நடத்தும் மேடவாக்கம் திருவள்ளுவர் மழலையர் துவக்கப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள்.
பள்ளிக்கரணை பாவணர் தமிழ்வழிப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள்.
25.11.2017 அம்பத்தூர் தாய்தமிழ்ப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள்.
6.12.2017 அன்று குன்றத்தூர் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்வழிப் பள்ளியில் பயிலும் 125 மாணவர்கள்
7.12.2017 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி-1ல் பயிலும் 175 மாணவர்கள்.
08.12.2017 அன்று பூந்தமல்லி அருகில் உள்ள மலையம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் 75 மாணவர்கள்.
மேலும் கண்ணகி நகரிலும் வியாசர்பாடியிலும் மாலை நேரப் பாடசாலை நடத்தப்படுகிறது. மற்றும் ராயப்பேட்டையில் அரசுத் தேர்வுக்கான தகுதி வளர்ப்புப் பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது.
*2018 ம் ஆண்டு நிகழ்ச்சிகள்...*
2.10.2018 தேதியில் சென்னை எம்ஜிஆர் நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் ஆயிரம் மாணவர் மாணவியர்களுக்கு இனமுரசு நடிகர் சத்யராஜ் அவர்களின் தலைமையில் கல்வி உதவி வழங்கப்பட்டது.
26.11.2018 தேதியில் தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் பொருட்டு சென்னை மேடவாக்கம் திருவள்ளுவர் மழலையர் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் சுமார் 100 மாணவர்களுக்கு இனமுரசு நடிகர் சத்யராஜ் அவர்கள் கல்வி உதவி வழங்கினார்.
2.12.2018 தேதியில் திருவேற்காடு அருகிலுள்ள இறுக்கம் என்ற தீவில் தமிழ் வழியில் படிக்கும் சுமார் 100 மாணவர்களுக்கு கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவி வழங்கப்பட்டது.
6.12.2018 அன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் சென்னை குன்றத்தூரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் வழி பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.
7.12.2018 அன்று சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கொல்லச்சேரியில் தமிழ் வழியில் பயிலும் 100 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.
*2019 ம் ஆண்டு நிகழ்ச்சிகள்...*
15-08-219 அன்று "கற்க கல்வி அறக்கட்டளை"யின் சார்பில் வேலூர் மாவட்டம் கனியம்பாடி அருகிலுள்ள குரும்பபாளையம் கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் பேராசிரியர் இராமு மணிவண்ணன் அவர்கள் நிறுவி நடத்திவரும் "அமைதி பூங்கா" (Garden of Peace) பள்ளியில் பயிலும் 140 மாணவ மாணவியர்களுக்கும் எமது கற்க கல்வி அறக்கட்டளையின் சார்பாக, செயலாளர் கரு.அண்ணாமலை அவர்களின் தலைமையில்; அறக்கட்டளையின் நிறுவனர் குமணன் அவர்களின் முன்னிலையில் அனைவருக்கும் கல்வி உதவி வழங்கப்பட்டது.
2020 ம் ஆண்டு
"கற்க கல்வி அறக்கட்டளை" நடத்தும் "அன்னை மணியம்மை நூற்றாண்டு விழா" மற்றும் "தமிழ் வழியில் பயிலும் 2000 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா"
(நாள்: 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி, இடம் கலைஞர் கருணாநிதி சாலை, சென்னை - 600 078 )
தலைமை: கரு. அண்ணாமலை
கல்வி உதவி வழங்கி சிறப்புரை
கனிமொழி எம்.பி.,
(மாநில மகளிரணி செயலாளர், திமுக.)
தோழர். கொளத்தூர் மணி,
(தலைவர், தி.வி.க.)
வழக்கறிஞர் எஸ். துரைசாமி
(துணைத் தலைவர், தபெ.தி.க.)
அனைவரும் வருக ! வருக !!...
🙏🙏🙏
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் எண்ணமுள்ளவர்கள், எங்கள் அறக்கட்டளைக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
*KARKA* ,
62418336742,
IFSC- SBIN0020946,
SBI, Bharathi nagar branch velachery.
Current A/C

*தொடர்புக்கு

கரு. அண்ணாமலை ,
தொ.எண் - 9444011124,
செயலாளர்,
கற்க கல்வி அறக்கட்டளை,
சென்னை - 78.

01.02.2020

No comments:

Post a Comment