வெளக்கேத்துறதுக்கான வெளக்கத்தை அகில உலக விஞ்ஞானி ஒய்.ஜி.மதுவந்தியே சொல்லிடுச்சி. அதனால இனி வெளக்கேத்திட வேண்டியதுதான். பிரம்மனோட மூளைக்கு முன்னாடி பக்கத்துல இருந்து பொறந்தவங்களாச்சே..! அகில உலகத்துல அவாளுங்களுக்கு தெரியாத ரகசியமா? ஆனா அந்தப்புள்ள இன்னொரு உண்மைய சொல்லாம விட்டுடுச்சி. அது என்னன்னா..? நம்மாளு மொதல்ல கைதட்டச் சொல்லி நாம தட்டுன சத்தத்துல அந்தக் கொரோனாவுக்கு காது காலி. இப்ப நாம காட்டப்போற வெளக்குல கண்ணும் காலி. ஆக சோலிய முடிக்கிறம். கொரோனாவுக்கு எதிரான நம்மோட இந்தப் போர்ல 9 நிமிசத்துக்கு ஒரு நொடி கூடுனாலும் கொறஞ்சாலும் தெய்வக்குத்தம் ஆகிட வாய்ப்பிருக்கலாம். அதனால கரெக்ட்டா 9 நிமிசம் மட்டும்தான் வெளக்கு காட்டனும். அடுத்த முறை இரவு 8 மணிக்கு நம்மாளு பேசறத வெச்சிதான் கொரோனாவுக்கு என்னாச்சின்னு துல்லியமா தெரிஞ்சிக்க முடியும். பி கேர் புல்...
05.04.2020
No comments:
Post a Comment