"எம் தமிழே நீ வாழி"
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் வட இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? நாம் ஏன் ஹிந்திக்காரர்களுக்கு கீழே வாழ வேண்டும்? இப்படி எல்லா நாட்டு மொழிகளையும் ஏன் அவர்கள் அவரவர் மண்ணிலேயே உரிமையின்றி அடக்கி வைக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்த அதிகாரம் கொடுத்தது யார்? வடவர்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? ஹிந்திக்கு மட்டும் எதற்கு எல்லா இடங்களிலும் முன்னுரிமை தரவேண்டும்? நம் ஊர் வங்கிகளில், அஞ்சலகங்களில், தொடர்வண்டி நிலையங்களில் ஹிந்தி மொழி எதற்கு? தமிழும் ஒரு உலகமொழியும் மட்டும் ஏன் போதாது? தமிழில் இல்லாத எதை ஹிந்தியில் கற்பதனால் தமிழர் அறிவு வளரும்? ஹிந்தி பேசும் எந்த நாட்டினர் தமிழரைவிட பல்திறன் கொண்டுள்ளனர்? தமிழக உயர்நீதி மன்றத்தில்கூட தமிழில் வழக்காடவோ தீர்ப்பு பெறவோ அனுமதிக்காமல் தடைபோட்டு வைத்திருக்க அவர்கள் யார்? தமிழர் கோயில்களில்கூட தமிழில் வணங்க உரிமையில்லை என்பது எவ்வளவு பெரிய அநீதி? நிகழ்கால இந்தியாவில் பல மொழிகள் ஹிந்தியால் காயடிக்கப்பட்டதை உணராமல் தமிழ் & தமிழர் வெறுப்பால் தொடர்ந்து 'ஹிந்தியால் தமிழ் அழியுமா?' என்பது போன்று எப்போதும் சில மொன்னை கேள்விகளுடன் வடவர்களுக்கு சொம்பு தூக்கும் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு; 'தேவைப்படின் எம்மொழியும் அறிதல் வேறு, அவரவர் மொழி உரிமைக்குரலும் அடிமைத்தன எதிர்ப்பும் வேறு' என்ற அறிவு வருவது எப்போது? தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சனாய் இருந்துகொண்டு ஹிந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் சொம்பு தூக்கும் அடிமைத்தனம் உருவானது எப்படி?
தமிழகத்தின் சுயமரியாதையை தமிழர்களுக்கும், மனசாட்சியற்ற தில்லிக்கும் உணர்த்திய ஹிந்தி ஆதிக்க எதிர்ப்பு தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்...!
26.01.2020
No comments:
Post a Comment