13.7.21

மோடி ஜீ, நீங்கள் மக்களுக்கான பிரதமர்தானா?

தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை கட்டணமாக அதிகபட்சம் ரூ.4,500 மட்டுமே வசூலிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது - செய்தி

(ஒரு சிலைக்கு 3000 கோடி). 140 கோடி மக்களுக்கு 15000 கோடி என்று ஒதுக்கியுள்ளது இந்திய மைய அரசு. அதாவது, சராசரியாக ஒருவருக்கு 107 ரூபாய். தமிழ்நாடு தனியாக இருந்தாலே தம் மக்களுக்கு எவ்வளவோ சாதிக்கும் என்று எண்ணம் எழுகிறது. அதாவது...,

எல்லாத்துக்கும் வரி கட்டு. நோய் வந்தா நீயே பார்த்துக்கோ. ஜெய் பாரத் மாதா கீ...
(பங்களாதேஷில் 250 ரூ என்று செய்தி. பாகிஸ்தான் கட்டணம் தெரியவில்லை. மற்றதெல்லாம் உண்மை).
5000 ரூ பள்ளிக் கட்டணம் என்று அரசு அறிவித்தால் 50 ஆயிரம்கூட மறைமுகமாக மிரட்டி வாங்குகிறார்கள் தனியார் பள்ளிகளில். தனியார் மருத்துவமனைகளைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தவறு நடந்த எந்தத் தனியார் மருத்துவமனைகளாவது இங்கே மூடப்பட்டதாக எப்போதேனும் செய்தி வந்துள்ளதா? மருந்துகள், மருத்துவக் கல்வி, மருத்துவமனைகள் எல்லாமே கார்ப்பரேட் மயம். இந்த கொரோனோ தொடர்பான கட்டண உத்தரவுகளை மட்டும் அவர்கள் மதித்துவிடுவார்களா? மனிதாபிமானமுள்ளவர்கள் மட்டுமே விதிவிலக்கு.

கொரோனோ சிகிச்சை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக பொதுவாக்க வேண்டும். அனைத்து அரசு பொது மருத்துவர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். (சென்னை அரசு மருத்துவமனை ஒன்றில் இதெல்லாம் மருத்துவர் செலவு என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்).
பிரதமர் மோடி அவர்களே !...

மனிதாபிமானம் இல்லாமல் எப்படி உங்களால் இப்படி உத்தரவு போட முடிகிறது ?
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் பரிசோதனை கட்டணம், மருத்துவ சிகிச்சைக் கட்டணம் மற்றும் அவர்களுக்கான உணவு, மருந்து ,மாத்திரைகள் அனைத்தும் உங்கள் அரசு அல்லவா இலவசமாக வழங்க வேண்டும்?
இந்த துயரமான சந்தர்ப்பத்திலாவது நீங்கள் இந்தியாவின் பிரதமராக நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
ஒரு மாநில (கேரளா ) முதல்வரால் இதையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்த முடியும்போது, ஒரு இந்தியாவின் பிரதமராக உங்களால் செயற்படுத்த முடியாதா? நீங்கள்தானே ஒரு சிலைக்கு 3000 கோடி செலவு செய்தீர்கள்?
நிச்சயம் உங்களால் முடியும். கொரோனோ பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவ உதவி கிடைக்க உத்தரவு போடுங்கள். தயவு செய்து மக்களின் மேல் கொஞ்சமாவது அன்பு செலுத்துங்கள்.

23.03.2020

No comments:

Post a Comment