விலை உயர்ந்த கைபேசியை பயன்படுத்துகிறீர்களா?... ஒரு நிமிடம் இதைப் படியுங்கள்.
Redmi Note 7 Pro கைபேசி ஒன்று வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்தேன். கடந்த ஜனவரி 05 ஆம் தேதி வளசரவாக்கத்தில் அந்த கைபேசியை தொலைத்துவிட்டேன். அதைக் கண்டு பிடிப்பது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். Google Find My Device மூலமாகவும் தேடிப் பார்த்தேன். இரண்டு முறை காவல் நிலையம் சென்று தொடர்பு கொண்டேன். கண்டுபிடித்ததும் தெரிவிப்பதாக சொன்னார்கள்.
தொலைந்துபோன கைபேசி தொடர்பாக பல இணைய தளங்களிலும், பல Youtube காணொளிகளையும் நிறைய பார்த்தேன்.
உண்மையிலேயே காவல்துறை உதவி இல்லாமல் தொலைந்த கைபேசியை கண்டுபிடிக்க முடியுமா? என்பது குறித்து இயன்றவரையில் தேடிப்பார்த்தேன். இதற்காக இணையதளங்களில் மற்றும் Google Play Store செயலிகளில் நிறைய செயலிகள் இருக்கிறது. ஆனால் அறிவார்ந்த திருடர்களுக்கு இந்த செயலிகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கடைசியாக "Cerberus" என்ற ஒரு செயலியை பார்த்தேன். இந்த செயலி உங்கள் கைபேசியில் இருந்தால் காவல்துறை உதவி இல்லாமல் நீங்களே கண்டுபிடிக்கலாம். அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது. இதன் இணையதள சுட்டி ( https://www.cerberusapp.com ) இதுதான். இது google play store -ல் கிடைக்காது. இந்த இணையதளம் சென்று தரவிறக்கம் செய்துதான் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை உங்கள் கைபேசி தொலைந்து போனால்; அதில் நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பாட்டில் வைத்திருந்தால்; உங்கள் கைபேசியை எடுத்தவர் கைபேசியை அணைக்க முடியாது. வேறு Sim Card பொருத்தினால் அந்த இடத்தின் Map -ஐ துல்லியமாக நீங்கள் பதிவு செய்யும் எண்ணுக்கு குறுந்தகவலாக உடனே அனுப்பி விடும். இதுபோல் இன்னும் நிறைய பாதுகாப்பு வசதிகள் இருக்கிறது.
குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலாவது எல்லோரும் இன்றைக்கு கைபேசியை பயன்படுத்துகிறார்கள். நீங்களும் பயன்படுத்தினால் தயவுசெய்து சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த செயலியை உங்கள் கைபேசியில் activate செய்துவிடுங்கள். தொலைந்த பின்பு வருத்தப்படுவதும் அலைவதும் தவிர்க்க இந்த செயலி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். (தற்போது இது கட்டண செயலியாக்கிவிட்டார்கள்)
29.01.2020
No comments:
Post a Comment