15.7.21

'எழுத்துகளில் மயங்காதீர்கள்' - வலம்புரி ஜான்

வலம்புரி ஜான் அவர்கள் மலேசியாவில் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றை கேட்டேன். மிக அருமையான பேச்சு. இந்த மண்ணில் ஆகச்சிறந்த அறிவாளிகள் எல்லாருமே தமிழின் இலக்கிய ஆழத்தை நன்கு உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். முந்தைய தலைமுறை தமிழ் அறிஞர்கள் பெரும் அறிவுடனும் பண்புடனும் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். அந்த சொற்பொழிவிலே ஓரிடத்தில் அவர் இப்படி சொல்கிறார்.

"எழுத்துக்களில் மயங்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எவ்வளவு அருமையாகவும் எழுத முடியும். ஒருவன் எழுதத் தொடங்கும் முன்னர் எப்படி இருந்தான்? அவன் எழுதிய பின்பு எப்படி இருக்கிறான்? என்பதை கவனியுங்கள். எழுதுவதற்கேற்ப அவன் வாழ்கிறானா? அதற்கேற்ப அவனால் வாழ முடிகிறதா? என்பதை கவனியுங்கள். ஒருவனின் எழுத்து அவனையே மாற்றவில்லை எனில் அவன் எழுதியதைப் படிப்பவனை மட்டும் எப்படி அது மாற்றும்? இப்படி எழுதிக் கொண்டிருப்பவன் எழுத்தாளன் அல்ல; ஏமாற்றுக்காரன். அதனால்தான் சொல்கிறேன்..., எழுத்துகளில் மட்டும் மயங்காதீர்கள், அதை எழுதியவனிடத்தில் உண்மை இருக்கிறதா என்றும் கவனியுங்கள்"

23.04.2020



No comments:

Post a Comment