15.7.21

பெரியார் அம்பேத்கரின் தேவை

 

திண்டுக்கல் புதுச்சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் அருந்ததியர் என்ற பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்மணி. அவரை ஆதிக்க ஜாதியினர் நாற்காலியில் உட்காரவிடாமல் செய்வதாக முகநூலில் வந்த செய்தியை அப்படியே சில தோழர்களுக்கு அனுப்பி இதுபற்றி விசாரிக்குமாறும் பலரது கவனத்திற்குக் கொண்டு செல்லும்படியும் கேட்டிருந்தேன். அந்தப் பெண்மணி இதை மறுத்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளதாக விவரம் கிடைத்தது. இரு செய்திகளையும் பதிவில் இணைத்துள்ளேன். இப்படி இல்லை என்பது நல்ல செய்திதான். ஆனால் நீதிமன்றத்திலும் காவல்துறை பதிவேடுகளிலும் ஜாதிப்பிரச்சினைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் யாருக்கும் பாதகம் வராதபடிதான் திரிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டுதான் இக்காணொளியைக் கவனிக்க வேண்டியுள்ளது. அப்பாவிகளை மிரட்டும் ஜாதி வீரம், 'ஆமாம் நாங்கள் இப்படித்தான் செய்வோம்' என்று சட்டத்தின் முன் மீசை முறுக்குவதில்லை. மாறாக, அதிகாரத்தின் துணையுடன் இந்தக் காணொளி மாதிரியான சமாளிப்புகளை வெளியிடுவதில்தான் தற்காலிகமாகப் பதுங்கிக்கொள்ளும். அதிகார வர்கமும் இதற்குமேல் எந்தத் தீர்வையும் விரும்புவதில்லை. இம்மாதிரியான செய்திகளைக் காணும்போதுதான் பெரியாரும் அம்பேத்கரும் இந்த மண்ணில் எவ்வளவு பெரிய மகத்தான அர்ப்பணிப்பைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று அவர்களை இன்னும் போற்றத் தோன்றுகிறது. யாருக்கோ; எவருக்கோ; நமக்கென்ன என எண்ணாமல் இப்படிப்பட்ட அடக்குமுறை பிரச்சினைகளுக்கெல்லாம் போராடும் எல்லா தோழர்களுக்கும் பெரும் நன்றியும் பாராட்டுகளும்...!

21.04.2020

No comments:

Post a Comment