சிதம்பரம் கோயிலில் தமிழைப் புறக்கணிப்போம். முன்பு திருவாசகம் பாடிய ஆறுமுக நாவலரை அடித்தோம். கும்பிடவரும் பெண்களை அடித்தோம். இனியும் அடிப்போம். சட்டம் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம். இந்தியாவில் எங்குமில்லாத ஆகம விதிகள் தமிழகத்தில் இருக்கிறது என கதை விடுவோம். கோயில் நிலங்களுக்கு முறையாக வாடகை செலுத்தமாட்டோம். கைப்பற்றிக்கொள்வோம். கோயில் நகைகளுக்கு கணக்கு சொல்ல மாட்டோம். இதற்கு இடையூறாக இருக்கும் அறநிலையத்துறையை ஒழிக்க பாடுபடுவோம். எங்கள் நலனுக்கான ஜாதிக்கட்சியை ஹிந்து கட்சியாக மாற்றுவோம். அனைவரும் சமம் என்பதை ஏற்க மாட்டோம். மனிதர்களில் நாங்களே உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் கதை விட்டுக்கொண்டிருப்போம். எங்களை விமர்சிப்பவர்களை ஹிந்து விரோதி தேசவிரோதி என்போம். நாங்கள் அறிவாளிகளாகவும் நல்லவர்களாவும் அமைதியானவர்களாவும் நடிப்போம். தமிழர்களுக்கு எதிராக திரைமறைவில் செயல்பட்டுக்கொண்டிருப்பது தெரியாமல் இப்படி சோறுபோடுவதை மட்டும் பரப்ப எல்லாம்வல்ல பகவான் அருள்கொண்டு ஆள்பிடிப்போம். எங்கள் புகழ்பாடுகிறவர்களை கவனித்து பாருங்கள், அவர்களே தன்னில் அதிசிறந்த அறிவாளிகள்; ஹிந்து நேசர்கள்; தேசபக்தர்கள். இவர்கள் உள்ளவரை யாரும் எங்களை அசைக்க முடியாது.
பின்குறிப்பு :
புகழ் பரப்பினால் மட்டும் போதும். உங்கள் தலைமுறைக்கும் தொடாமல் குடும்பத்துடன் தூர நின்று கருவறைக்கு வெளியிலேயே நின்று கும்பிட்டுவிட்டு செல்லவும்.
எங்கள் நரித்தனத்தை பரப்ப முயற்சிக்காமல் இப்படி சோறு போடுவதை மட்டும் பரப்புங்கள். அளவில்லாத கடவுள் அருள் பெறுங்கள்.
10.04.2020
No comments:
Post a Comment