"சூரியன் என்பதே ஒரு நட்சத்திரம்தான். நம் பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனைப் போலவே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பல கிரகங்கள் சுற்றி வரலாம். அவற்றிலும் நம்மைப் போலவே சிந்திக்கத் தெரிந்த ஜீவராசிகள் இருக்கலாம்"
- இப்படி 16 -ம் நூற்றாண்டிலேயே எடுத்துச் சொன்ன வானவியல் விஞ்ஞானிதான் ஜியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)
இத்தாலியின் நோலா நகரில் 1548 ம் ஆண்டு பிறந்தவர். 24 வயதில் பாதிரியாராகிறார். ஆனாலும் பின்னாளில் கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் செலுத்துகிறார். மேற்குறிப்பிட்ட இக்கருத்தைச் சொன்னதற்காக இவருக்கு மதவாதிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
இவரது கழுத்தைச் சுற்றி வெடிகுண்டுப் பொடிகள் தூவப்பட்டன. நாக்கு, தாடையுடன் சேர்த்து ஆணியடிக்கப்பட்டது. அவரைச் சுற்றி மரக்கட்டைகளையும், குச்சிகளையும் குவித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இவரது அறிவியல் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்களால், இவர் இறந்து 7 வருடம் கழித்து நோலாவில் புரூனோவுக்கு சிலை வைக்கப்பட்டது. சந்திரனில் காணப்படும் பள்ளத்தாக்குகளில் ஒன்றுக்கு ‘ஜியார்டானோ ப்ரூனோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
***
No comments:
Post a Comment