13.7.21

மோடி - இந்தியாவின் மன்னரா?

இந்தியாவில் மன்னர் ஆட்சி நடக்கவில்லை. அடிக்கடி 8 மணிக்கு பிரதமர் அறிவிப்பு என்பது கூட்டாட்சி அரசியலுக்கு சரியானதா? பண மதிப்பிழப்பு அறிக்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்திருக்க வேண்டும். சட்டம் ஒழுங்குகள் அந்தந்த மாநில முதல்வர்கள் கையில் இருக்க, அவர்களை முறையாக கலந்தாலோசித்து போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர்தான் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதா? இன்னும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது எப்படி? நடுவண் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் இருக்கிறாரா இல்லையா? விளைவுகளை ஆராய்ந்திருந்தால் முன்னதாக ஒருநாள் மட்டும் ஊரடங்கும் மாலை 5 மணிக்கு கைதட்டச் சொன்னதும் ஏன்? அடுத்த நாளில்தான் கொரோனோ பயங்கரத்தை நடுவண் அரசு உணர்ந்ததா? ஊரடங்கை அறிவித்ததோடு நடுவண் அரசின் வேலை முடிந்துவிட்டதா? மக்களுக்கு நடுவன் அரசின் மூலமாக கிடைக்கும் பாதுகாப்பு உதவிகள் என்னென்ன? எல்லாமே மாநிலங்கள் செய்யும்போது தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள மட்டும் நடுவண் அரசு நினைப்பதன் நோக்கம் என்ன? கொஞ்சம் கொஞ்சமாக மொழி, கல்வி, வேலைவாய்ப்பு என்று மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கிறதா நடுவண் அரசு? எனில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2 முறை அடிக்கல் நாட்டியும் இன்னும் துவங்கப்படாதது ஏன்? மக்கள் எல்லோரும் அடித்துப் பிடித்து அவரவர் ஊருக்கு கிளம்பி நெரிசலில் தத்தளித்தபோது toll free அறிவிக்காமல் 21 நாட்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவித்துவிட்டு toll free என்று அறிவிப்பது யாரை ஏமாற்ற? யாரும் பயன்படுத்தாத சமஸ்கிருத மொழிக்கு முன்னுரிமை கொடுத்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதும், 3000 கோடிக்கு சிலை வைப்பதும், கோயில் கட்டுவதும்தான் ஒரு நாட்டின் முக்கிய நோக்கங்களா?

அரசு மக்களுக்கானதுதான். ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் தனியார்களுக்காக அல்லவா சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்...!

26.03.2020

No comments:

Post a Comment