"புத்தரின் ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கர்" என்ற வசுமித்ரவின் விமர்சனம் குறித்து...
*
எல்லோரையும் விமர்சிக்கலாம்தான். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இப்படி தேடி எடுத்து அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் நோக்கிலேயே செயல்படுவது எல்லாம் உள்நோக்கம் கொண்டவையாகவே தெரிகிறது. இப்போது இதனால் இவ்வாறாக அம்பேத்கரை விமர்சித்து ஆகப்போவது என்ன? வசுமித்ரவின் நோக்கம் என்ன? இதற்கு அவரது 1000 பக்க நூலைத்தான் வாசிக்க வேண்டும் என்பது ஆணவம். சமூக அக்கறை கருத்து உள்ளவர்களிடம் பணிவு இருக்க வேண்டும். அம்பேத்கர் ஒரு சாதாரண ஆள் என்று நிறுவத் துடிக்கிறாரா வசுமித்ர? பல ஒடுக்குமுறைகளை சந்தித்த ஒரு சமூகம் கொண்டாடும் பெரிய அடையாளத்தையே நோண்டிக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? மார்க்சிய கண்ணோட்டத்துடன் பிற சமூகங்கள் கொண்டாடும் ஒவ்வொரு அடையாளங்களையும் எழுதுவாரா வசுமித்ர? முற்போக்குப் போர்வையில் தன் சுயவெறுப்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளாகவே இவை தெரிகிறது. முதலில் தான் சார்ந்த ஜாதியின் பிம்பத்தை விமர்சிக்க இவரது பரந்த மார்க்சிய அறிவு உதவினால் நல்லது.
07.05.2020
No comments:
Post a Comment