ஏதாவது ஒரு கொள்கையின் பேரால்; கருத்திரிமை என்ற பேரால் தமிழர் அடையாளங்கள் ஒவ்வொன்றும் தொடர்ந்து திட்டமிட்டே நகைப்புக்குரியதாக சிதைக்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் தமிழர்களுக்கு விரோதமாகவே வேண்டுமென்றே பலர் இயங்குகின்றனர். ஒவ்வொரு மொழிக்காரனும் அவனவன் அடையாளங்களை மட்டும் யாரும் விமர்சித்துவிடக் கூடாது என்றே கவனமாக இருக்கிறான். தமிழர்கள் மட்டும் பலவகைகளிலும் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். தமிழர் அடையாளங்களை சிதைப்பதில் முற்போக்கு இயக்கங்களில் இருக்கும் தமிழர் அல்லாதார் மற்றும் தமிழ் வெறுப்பு கொண்டோர்தான் இப்பணியில் முதன்மை வகிக்கின்றனர்.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மாமன்னர் இராசராச சோழனைவிடவும் சிறிய பரப்பை ஆண்ட மராட்டிய சிவாஜி பெரிய மன்னராகப் போற்றப்படுகிறான். விமர்சிக்க யாருமில்லை. தமிழ் மண்ணில் விடுதலைக்குப் போராடி மாண்ட வீரன் அழகுமுத்து, மருதிருவர், தீரன் சின்னமலை போன்றோரைவிடவும் வீரபாண்டிய கெட்டிபொம்மு போற்றப்படுகிறான். திருமலை நாயக்கன் வாழ்வு பொய்யாய் புகழப்படுகிறது. இதன் தொடர்ச்சி இப்போது தலைவர் பிரபாகரனை விமர்சிப்பது என்ற வரையில் நீள்கிறது.
எவன் எந்தக் கொள்கையாளனாக இருந்தாலும், மதத்தவனாக இருந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் இழிவு செய்வானாகில் அவனை மயிருக்கு சமமாய் எண்ணி எதிர்க்கும் குணம் இனிமேலாவது எல்லா தமிழர்க்கும் வரவேண்டும். தன் ஜாதி மட்டுமே உயர்ந்தது; சிறந்தது என்று தமிழர்க்குள்ளே சிண்டு முடித்து சண்டை மூட்டும் மனநோயாளிகள் திருந்த வேண்டும்.
கேரளா கடவுளின் தேசம் என்று நெடுங்காலமாய் கதைவிடுகிறார்கள். உழைத்து காய்கறிகளை அனுப்பி வைக்கும் தமிழ் மக்களின் ஊருக்குள் மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து திருட்டுத்தனமாய் கொட்டுபவர்களின் ஊரில் சாத்தான்தானே குடியிருக்க முடியும்?
தியாகத்திலும் செயல்வீரத்திலும் ஒழுக்கத்திலும் களங்கமில்லா தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை சிறுமைப்படுத்துவது தமிழர்களால் பொறுத்துக்கொள்ள இயலாத செயல்.
துல்கர் சல்மான், உண்மையிலேயே தன் தாயை மதிக்கத் தெரிந்தவனாக இருந்தால் உரிமைக்காகப் போராடிய ஒரு வீரனை மதிக்கத் தெரியாமல்போக வாய்ப்பில்லை.
இப்படித்தான் 'தமிழச்சிகள் அனைவரும் கருத்த எருமை மாடுகள்' என்றான் நடிகன் ஜெயராம். அவன் வீட்டில் பெட்ரோல் குண்டு விழுந்ததும் அப்படிச் சொல்லவில்லை என்று பின்வாங்கினான்.
No comments:
Post a Comment