நோய் தொற்றக்கூடாது என்று அரசு ஊரடங்கு அறிவித்த பின்னும் கூட்டமாக தொழுகைக்கு செல்வது என்ன மனநிலை? கூட்டமாக வேறு எங்கும் மக்கள் இல்லையா என்று இதற்கு முட்டுக்கொடுக்க நினைத்தால் இதுதான் பச்சை சங்கித்தனம்.
சில மூட முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல்களினாலும் பேச்சுகளினாலும் மொத்த முஸ்லீம்களின் மீதும் வெறுப்பு பரவிக் கொண்டிருக்கிறது. சங் பரிவார்கள் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடியே நடக்கிறது. ஹிந்துக்களிலிருந்து காவி அடிப்படைவாதிகள் தனியாக அடையாளம் கண்டு விமர்சிக்கப்படுவதைப்போல முஸ்லீம்களிலிருந்து பச்சை அடிப்படைவாதிகள் தனியாக அடையாளம் கண்டு விமர்சிக்கப்பட வேண்டும். இல்லையேல் முஸ்லீம்களின் மீதான வெறுப்பு பரவல் நாளுக்குநாள் கூடிக்கொண்டிருப்பதை கட்டுப்படுத்த முடியாது.
முன்னர் முஸ்லீம் நாடுகளில் நடந்த எந்த பிரச்சினைகளின்போதும் உணவின்றி உதவியின்றி கதறிய முஸ்லீம் மக்களை; முஸ்லீம் குழந்தைகளை அல்லா காப்பாற்றவில்லை என்பதை யாரும் உணரக்காணோம். கொரோனா என்பது தங்களை ஒடுக்க திட்டமிடப்பட்டு பரப்பப்படும் அவதூறு என்றே இன்னும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் வற்றாத சொத்து.
காவி சங்கிகளும் பச்சை சங்கிகளும் இயற்பியல் விதிப்படியே ஒருவருக்கொருவர் தங்களை வலுப்படுத்திக் கொள்கின்றனர்.
இஸ்லாம் மீது முகநூலில் சிறு விமர்சனம் வைத்தாலும் தாங்கிக்கொள்ள முடியாமல்; அனுமதிக்க முடியாமல்; ஜனநாயகமற்று ஆவேசத்துடன் பதில் கருத்து எழுதும் பலருக்கும் சுய அறிவு வளர இசுலாமிலிருந்து ஒரு பெரியார் வரவேண்டும்.
'அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே' எனும் அடிப்படைவாதிகள் முதலில் விமர்சனங்களுக்கு அஞ்சி நடுங்காமல் ஜனநாயகத்தன்மைக்கு வரவேண்டும்.
04.04.2020
No comments:
Post a Comment