13.7.21

"ஹீலர் பாஸ்கர் கைதும் பார்ப்பன அறிவுஜீவிகளின் வதந்திகளும்"


பெருமாளின் அவதாரமே கொரோனா என்று நாம் யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் எச் ராஜாவும், அண்ணி புகழ் சேகரும் நம்மீது சீறியிருப்பார்கள். இன்னும் பலரும் குதித்திருப்பார்கள். ஆனால் இந்த டாக்டருக்கு அப்படி எதுவும் நடக்காது. ஏனென்றால் இவர் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்.

சமீபத்தில் ஹீலர் பாஸ்கர் மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகிறார் என்று அவரை கைது செய்து சிறையிலடைத்தார்கள். அவர் செய்தது தவறுதான். சட்ட நடவடிக்கையும் சரிதான். இப்படியான வதந்திகளை இவர் மட்டுமா பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்? இந்த மந்திரம் சொன்னால் கொரோனோ கட்டுப்படும் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அவர்களில் யாரையேனும் கைது செய்கிறதா அரசு?
உலகமே பயப்படும் ஒரு வியாதியை கடவுளின் அவதாரமென்று சொல்லி மக்களின் மனதில் இந்த நோய் பற்றிய அறியாமையை ஏற்படுத்துவதும் குற்றம்தானே. அதுவும் படித்த ஒரு மருத்துவர் சொல்வது அறிவுடைமையா? இதற்கு அரசும், மருத்துவ கவுன்சிலும் என்ன செய்கிறது ?
இந்த டாக்டர் கமலா சொன்னதில் இருந்து சில கேள்விகள் எழுகிறது.
1. பெருமாள் கொரோனா அவதாரம் எடுக்க அவரை முன் பின் தெரியாத சைனாவுக்கு ஏன் சென்றார்?
2. கொரோனா அவதாரமாக மாறிய பெருமாள் அவருக்கு அதிக பக்தர்கள் உள்ள இந்தியாவை அட்டாக் செய்யாமல் ஏன் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றார்?
3. அந்த பெருமாளே கொரோனா அவதாரம் எடுத்து நம்மை அழிக்க வரும்போது மோடி சொன்னதைக் கேட்டு நாம் எல்லோரும் வீட்டுக்குள் மறைந்திருந்து பெருமாளை அலையவிடுவது இந்து மதத்திற்கும் பெருமாளுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
4. நம்மையோ அல்லது நம் குடும்பத்தில் யாரையோ யாரோ ஒருவர் கொல்ல வந்தால் நாம் நம் உயிரையும் பொருட்படுத்தாது அவர்களை கொல்லக்கூட தயங்க மாட்டோம். அப்படியெனில் உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை கொன்று குவிக்கும் இந்த கொரோனா பெருமாளை நாம் என்ன செய்யலாம்? ஊரடங்கு சட்டமே பெருமாளுக்கு எதிரானதாகிவிடுகிறதே.
5. கமலா செல்வராஜ் சொல்வது போல் பெருமாளின் அவதாரமே கொரோனா எனில் இந்த கலியுகத்தை அழிக்க பெருமாள் கொரோனா வடிவில் வந்திருக்கிறார் எனில், கொரோனா பாதித்த பல பேரை மருந்து கொடுத்து மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். காப்பாற்றியும் வருகிறார்கள். அப்படியெனில்.. விஞ்ஞானம் கண்டுபிடித்த மருந்து கொரோனா வடிவில் இருந்த பெருமாளை கொன்றுவிட்டது என்று தானே பொருள். மேதாவி கமலா செல்வராஜ் இதை ஒப்புக் கொள்வாரா?..
6. சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் கடவுளோடும் புராணங்களோடும் வேதத்தோடும் ஆன்மீகத்தோடும் இணைத்து திரித்து தங்களுக்கு மவுசு கூட்டிக் கொள்வதிலேயே கவனம் செலுத்தும் இவர்களின் நோக்கம்தான் என்ன?
7. ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார் சரிதான். இதேபோல் இந்த வேத மந்திரம் சொன்னால் எந்த நோயும் பரவாது என்று காலந்தோறும் ஏதோவொரு வதந்தி பரப்பி பிழைப்பவர்களை யாரும் கைது செய்வதில்லை ஏன்?
ரஷ்யா நிலவுப் பயணம் மேற்கொண்டபோது சிவனின் தலையிலிருக்கும் சந்திரனில் மனிதன் கால் வைப்பது மகா பாவம் என்றாராம் சர்.சி.வி.இராமன். இவர் ஒரு நோபல் பரிசு பெற்ற அறிவியல் விஞ்ஞானி. எப்போதும் இவ்வளவுதான் இந்த மேதாவிக் கூட்டத்தின் அறிவு. எல்லோரும் படிக்க வாய்ப்பு ஏற்பட்ட காலத்திற்குப் பின்னர் பல சமூகங்களிலிருந்தும் பல அறிவுக்கூர்மையானவர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் நம்மிலேயே ஒருகூட்டம் இன்னும் இவர்களைத்தான் பிறவி அறிவாளிகள் என்று நம்பிக் கொண்டிருப்பது so sad.

30.03.2020

No comments:

Post a Comment