16.7.21

பேரறிஞர் அண்ணா

"பேரறிஞர் அண்ணா யார்?" என்பதைப் பற்றி புதிய கோணத்தில் விவாதிக்கும் இக்காணொளியைத் தவறாமல் பாருங்கள்.

பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிட இயக்க கொள்கைகள் & வரலாறு பற்றியும் தெரியாத இளைய தலைமுறையினர் பலரும் இன்றைக்கு திமுக கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. கட்சியின் உயர் பொறுப்பிலும் பதவிகளிலும் இருப்பவர்களுக்குக்கூட இவை தெரியாமலிருப்பது காலக்கொடுமை. காங்கிரஸ் பண்ணையார்களை எதிர்த்து வளர்ந்த எளிய மக்களின் கட்சி இன்றோ குறுநில மன்னர் பரம்பரை போல வாரிசு அரசியலால் சீரழிகிறது. பணம் இருக்கிற ஒரே காரணத்தால் பல பெருச்சாளிகள் பதவிகளில் இருந்துகொண்டிருக்கின்றனர். ஒரே ஆளே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் மாவட்ட செயலாளராய் இருக்கும் அவலமும் தொடர்கிறது. இதை யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை. இன்றைக்கு டி.ஆர். பாலு & தயாநிதி மாறன் பேசியிருப்பது படுகேவலம். இவர்களெல்லாம் கட்சியில் இருக்கவே தகுதியில்லாதவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் ஜாதி வெறியுடன் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். திமுக ஆதரவாளர்கள் யாருக்கேனும் உண்மையிலேயே கட்சியின் மீதும் கொள்கைகளின் மீதும் பேரறிஞர் அண்ணாவின் மீதும் மதிப்பு இருந்தால் உட்கட்சி குறைகளை வெளிப்படையாக விமர்சியுங்கள். அல்லது பொதுமக்களின் அக்கறையான விமர்சனங்களை கட்சியின் மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லுங்கள். இல்லையேல் கட்சியின் எதிர்காலம் போகப்போக தேய்பிறை மட்டுமே என்றாகிவிடும். இன்னொரு பெரிய கட்சியின் மீதான வெறுப்பில் கிடைக்கும் வாக்குகள் எல்லாம் கட்சிக்கு ஆதரவானதாகப் புரிந்துகொள்வது தவறு. இதை ஆரம்பகால திமுக மேடைகளில் பேரறிஞர் அண்ணாவே குறிப்பிட்டு பேசியுள்ளார்.


15.05.2020

No comments:

Post a Comment