பாளையங்கோட்டையில் குழந்தை யேசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் பணிபுரியும் கேத்தரின் மற்றும் டெய்சி என்ற ஆசிரியைகள் 10 -ம் வகுப்பு பயிலும் பேச்சியம்மாள் என்ற மாணவியை குறைந்த மதிப்பெண் எடுத்தார் என்ற காரணத்திற்காக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் மீதும் தொடர்புடைய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி இரண்டு நாட்களாக மாணவியின் சடலத்தை குடும்பத்தினர் இன்னும் வாங்கவில்லை.
மதிப்பெண்தான் மாணவர்களின் எதிர்காலம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் ஆசிரியர்களும் மாநிலக் கல்வித்துறையும். இன்னொரு பக்கம் மதிப்பெண் எடுத்தாலும் இது செல்லாது, நீட் போன்று வேறு தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறது மைய அரசு. பிறகு எதற்கு மாணவர்களை திட்ட வேண்டும் ஆசிரியர்கள்?
மாணவர்களிடம் உலக அறிவையும் தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்த்து மகிழ்ச்சியுடன் அவர்களை வாழவைக்க உதவ வேண்டிய கல்வி, இயந்திர தொழிற்சாலைகள் போலாகி அப்பாவி மக்களின் பிள்ளைகளை தொடர்ந்து பல்வேறு வழிகளில் சத்தமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
மாணவர்களுக்கு எவ்வகையில் மரணம் வந்தால்தான் என்ன? மாணவர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் இம்மாதிரியான பிரச்சினைகளின்போது மட்டும் ஏன் இவ்வளவு கனத்த அமைதியாய் இருக்கிறது?
01.02.2020
No comments:
Post a Comment