சாமியார்கள் என்றாலே போலிதான். அதிலென்ன தனியாக போலி சாமியார்கள்? கிறித்தவ முஸ்லிம் சாமியார்களும் இப்படித்தான். இயற்கைக்கு மாறாக இப்படித்தான் வாழவேண்டும் என்று இவர்களாக வகுக்கும் எதையும் இவர்களாலேயே பின்பற்ற முடிவதில்லை. இயற்கையை மீறுவது கடினம் என்பதை இவர்கள் உணர்ந்தே வாழ்கிறார்கள். ஆனாலும், தங்கள் குழப்பமான கருத்துக்களாலும் அனுபவங்களாலும் இவர்கள் இவர்களுக்கு மட்டுமல்லாது பின்பற்றும் அல்லது இவர்களை நம்பும் மக்களுக்கும் மன சிக்கல்களை உருவாக்குகிறார்கள். நல்லவிதமாக இல்லறம் நடத்துகிறவன் துறவறம் சென்று அடைய வேண்டியது ஏதுமில்லை என்று வள்ளுவர் சொல்கிறார். மற்ற கருத்துக்களில் எப்படியோ ஆனால் கீழ்காணும் காணொளியில் நித்தியானந்தா பேசுவது வாழ்வின் மிக எளிய தத்துவம். இதைப் பொருத்தவரையில் உண்மையான சாமியார் என்பவர் நித்தியானந்தாதான் இதைவிட வாழ்வில் சிறந்த தத்துவத்தை இவ்வளவு எளிமையாய் தன் நடைமுறையிலும் பின்பற்றி வாழ்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? எல்லாரும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் இப்படி உண்மை பேசுவதில்லை. இந்த வகையில் பேச்சுக்கும் நடத்தைக்கும் வேறுபாடு இல்லாத; மறைக்கத் தெரியாத உண்மையான சாமியார் என்றால் அது நித்யானந்தா மட்டுமே.
27.12.2019
No comments:
Post a Comment