30.6.21
Goback Genocidal Gotabaya
அடிமையிலும் கேவலமான அடிமைகள்
முற்றிலும் தமிழைப் புறக்கணித்து சமஸ்கிருத ஆதிக்கம். மிகவும் சிறப்பாக சேவையாற்றும் அடிமை எடப்பாடி ஐயாவை வாழ்த்துவோம்.
28.11.2019
சீமான் வேறு தலைவர் வேறு
சீமானை கிண்டலடிப்பதாக நினைத்து எவனோ கேவலப்பிறவி ஒருவன் ஒரு வேடிக்கை காணொளியை வெளியிட்டிருக்கிறான். அதில் தமிழ்த் தேசியத் தலைவர் பெயரையும் இணைத்திருக்கிறான். பிறப்பாலும் அல்லது உணர்வாலும் தமிழனாக இல்லாத அரை வேடக்காரர்கள் அதை பரப்புகிறார்கள். தங்களைத் தமிழராக உணரும் யோசிக்கும் அறிவுள்ளோர் யாரும் அதைப் பகிர்வதை தவிர்க்கவும்.
27.11.2019
நவம்பர் 27 - திசைதிருப்பல்
தமிழர் சுய உரிமை விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகள் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27 -ம் தேதி உலகத் தமிழர்கள் அனைவரும் "மாவீரர் நாள்" கடைப்பிடிக்கிறார்கள். இந்நாளில் காயத்ரி கடற்கரைக்கு அழைப்பு விடுப்பதும், ரஜினியின் தர்பார் பாடல் வெளியிட இருப்பதும் இயல்பாக நடப்பதல்ல.
25.11.2019
பா.ஜ.க -வின் கீழ்த்தர அரசியல்
லாலுவை வீழ்த்த வெட்டிய கிணற்றில் பூதம் கிளம்பிய கதை...
ஹிந்தி திணிப்பு
ஹிந்திக்காரர்களுக்கு மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் அடிமையா? ஹிந்திக்காரர்கள் வைப்பதே சட்டம் என்பதற்குத்தான் சுதந்திர இந்தியா கேட்டு போராடினார்களா?
அடிமை எடப்பாடியின் பரந்த மனசு.
"இனி தமிழ் தெரியாதவர்களும் தேர்வெழுதலாம். தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் நீதிபதியாகலாம்."
எடப்பாடி அய்யாவின் பரந்த மனசு.
23.11.2019
"முதுகுளத்தூர் கலவரம் / பயங்கரம்"
BJP யாருக்கான கட்சி? - அதிர்ச்சி தகவல்
BJP யாருக்கான கட்சி? அறிவுள்ள ஹிந்துக்கள் கவனத்திற்கு...!!!
பார்ப்பனத் திமிர்
கோயிலில் கொலை நடக்கலாம். கற்பழிப்பு நடக்கலாம். யாரைவேண்டுமானாலும் அர்ச்சகன்கள் அடிக்கலாம். இதற்கெல்லாம் வராத பொங்கல், இவற்றை யாரேனும் விமர்சித்தால் அவர்கள் மீது மட்டும் வருமென்றால் அவாள்களின் நோக்கம்தான் என்ன?
20.11.2019
சும்மாவா சொன்னார் பெரியார்?
அந்தப் பார்ப்பானுக்கு இந்தத் தண்டனையைக் கொடுத்தது யாரென்றால், அந்தக் கோயில் பார்ப்பான்களே என்று சொல்கிறார்கள். வழக்குப் பதிவு செய்த காவல்துறை இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்தது? "பார்ப்பான்களையும் பணக்காரர்களையும் இந்தியாவில் தண்டிக்க முடியாது" என்று சும்மாவா சொன்னார் பெரியார்?
19.11.2019
பார்ப்பனத் திமிர்
சிதம்பரம் நடராசர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்ற 51 வயது பெண்ணை அடித்துவிட்டு திமிராகப் பேசும் பார்ப்பான். இன்றைக்கே இந்தத் திமிர் என்றால் அக்காலத்திலும் பிஜேபி வலுவடைந்தால் எதிர்காலத்திலும் இவர்கள் எப்படி பிற மக்களை அணுகுவார்கள் என்று தமிழர்கள் சிந்திக்கவும்.
17.11.2019
"வாழ்வெனும் வெறுங்கதை"
இந்த பனி பொழியும் இரவிடமும், குளிரிடமும், நிலவொளியிடமும், தூரத்தில் தெரியும் இடுகாட்டிடமும், இருக்குமிடம் தெரியாமல் இருட்டில் மௌனித்திருக்கும் மலையிடமும், வயற்காட்டிலிருந்து ஒலிக்கும் ஓராயிரம் பெயர் தெரியா உயிரிகளிடமும், பூட்டப்பட்ட கோயிலுக்குள் தெரியும் சாமியிடமும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வானில் மினுக்கும் நட்சத்திரங்களிடமும், ஏரியிடமும், குளத்திடமும் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த பலகோடி மனிதர்களின் கதைகளிருக்கலாம். ஓரளவு இயற்கையைப் புரிந்த நாளிலிருந்து ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும் அவைகளிடமிருந்து அவன் அநேகர்களின் கதைகளைக் கேட்க ஆர்வப்படுகிறான். மனிதர்களின் வாழ்வும் இந்த பூமியின் மாற்றங்களும் பால்வீதியின் நிகழ்வுகளும் இறுதியில் கதைகளாகவே மாறிக்கொண்டிருக்கின்றன. பழகியவர்களும் பிரிந்தவர்களும் இருப்பவர்களும், வலியும் சிரிப்பும் அவமானத்தையும் தந்துவிட்டுப் போனவர்களும் இறுதியில் கதைகளாகவே சேமிக்கப்படுகிறார்கள். நாளை என்பது இன்றைய கதைகளை உள்ளடக்கியது. நேற்று என்பது இன்றைய கதைகள் மட்டும் இல்லாதது. 'இந்த கதைகள்' என்பது நினைவுகளின் வார்த்தைகளின் இடுக்குகளில் சுருக்கப்பட்டவை என்று பொருள்படும். அதாவது கடந்தகாலத்தை நிகழ்காலமாக்குவது. இதன்படி நினைத்த நொடியில் சங்க காலத்திற்கு சென்று உலவிவிட்டு வரலாம். புத்தனுடனும் பழகலாம் விவாதிக்கலாம். ஆசீவக அய்யனார்களுடனும் கைகுலுக்கலாம். பெரியாருடன் பேசலாம். யேசு சிலுவையில் அறையப்படுவதை வேடிக்கைப் பார்க்கலாம். பல வருடத்திற்கு முன்னர் ஆணவத்தால் ஊரில் அழிந்தவனைப் பார்த்து வருத்தப்படலாம். தனிமை என்பதுதான் என்னவாக இருக்கிறது எனில், நாம் கதைகளை உண்ணும் நேரம்; அல்லது கதைகள் நம்மை உண்ணும் நேரமாக இருக்கிறது.
17.11.2019
சாநக்கியர் எடப்பாடி...?
1. சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஏன் நிராகரிக்கப்பட்டது?
சிறந்த உரை எது?
திருக்குறளுக்கு மு.வ அவர்கள் எழுதிய உரை மிக மேலோட்டமானது. பரிமேலழகர் உரையோ பக்கச் சார்பானது. நிறைய குறள்களில் பொதிந்திருக்கும் கருத்துகள் இன்னும் முழுதாக உரையாக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் படித்ததில் சிறந்த உரையாசியராக யாரையேனும் கருதினால் தயவுகூர்ந்து தெரிவிக்கவும். படிக்கிறேன்.
13.11.2019
நீதியும் தனியார்மயமும்
விசாரணை சரியாக நடத்தப்படாத ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற அப்பாவிகளுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைதண்டனை. எந்தக் குற்றமும் செய்யாத தமிழீழ தமிழர்கள் முகாம்களில் அடைப்பு. ஆனால் ஜாதிக்கும் கட்சிக்கும் கொலை செய்தவர்களுக்கு விடுதலை...
தமிழுக்கு திராவிடமே பாதுகாப்பு
கருத்திலும் நடையிலும் தமிழ் மொழி எப்பேர்ப்பட்ட வளமும் செழுமையும் கொண்டது என்பதை உணராதவர்களே பார்ப்பனிய வைதீக மதத்தை எதிர்க்காமல் இருக்க முடியும். திராவிடம் தமிழுக்கு தீது செய்தது என்பதை வெறும் மேலோட்டமான அரசியல் பார்வையைக் கொண்டு மட்டும் விமர்சிப்போர் சற்று தமிழ் இலக்கியம் பக்கம் ஆழ்ந்து கவனிக்கவும். திராவிட இயக்கம் இல்லாது போயிருந்தால் வெறும் வைதீக ஹிந்து மதக் கருத்துக்கள் மட்டுமே தமிழ் இலக்கியம் என்றாகி இருக்கும். திராவிடம் தமிழுக்கு அரணாக இருந்துள்ளதை மறுக்க முடியாது. இனி தமிழின் வளமையை பார்ப்பனியம் அழிக்கும் சூழல் வந்துவிட்டது.
மார்க்சியமும் குண்டலகேசியும்
அறமே துணை
அறமே துணை - ஓர் எளிய பாடல்
தமிழே நீ வாழி...!
வயற்காட்டில் விளைந்த நெற்பயிரைக் கண்ட ஒரு தமிழ்ப் புலவனின் கற்பனையைப் பாரீர்...!
அயோத்தியில் புதிய கோயில்
ஹேய் பச்சகிளி... அவாளுங்களுக்குன்னு அயோத்தியில புதுசா இன்னொரு பெரிய தொழிற்சாலையை கட்டப்போறாங்களாம். நீ ஏன் துள்ளிக்குதிக்கிற? தலைமுறை தலைமுறையா அவங்க நல்லாருக்க சம்பாதிச்சி சேர்த்து வையி. எப்பவும் அவாளுங்கதான் நம்மைவிட ஒசத்தின்னு அவனுங்க சொல்றதப் பத்திக் கேள்வி கேட்காத. இதே மாதிரி மூடிக்கினு இருக்க பாரு...
09.11.2019
ஹிந்தி திணிப்புக்கு நோட்டம்
இதை வைத்தது அரசோ தனியாரோ... எதுவாயினும் திணிப்பே. இப்படித்தான் ஹிந்திக்கு நோட்டம் பார்ப்பார்கள். பின் படிப்படியாக மார்வாரி & ஹிந்திக்காரர்கள் வாழும் பகுதிகளிலுள்ள தமிழக அரசு அலுவலகங்களில் ஹிந்தி நுழைக்கப்படும். தமிழ் தவிர்க்கப்படும். கேட்க ஆளிருக்காது. இருக்கிற இளிச்சவாயத் தமிழர்களுக்கு மதவெறி ஏற்றப்பட்டு மார்வாரி & ஹிந்தி தலைமையின் கீழ் வரவைப்பார்கள். ஏற்கெனவே சில இடங்களில் உருது இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.
ஒப்பிலா வள்ளுவன்
இன்று இந்தக் குறளைப் படித்து மிகவும் வியந்தேன். வள்ளுவன் ஒரு ஒப்பிலா மாமேதை.
திருவள்ளுவர்
Thiruvalluvar is an excellent rationalist. He maintains the best life style of Tamils. To compare him to any biased opinion is intellectually blind. Every rational person has many angles about nature and life. Single angle is a visual impairment. He does not have any monotony of Buddhism or Samana or Hinduthva. He recorded what seemed right to his knowledge.
வள்ளுவர் எந்த மதம்?...
திருவள்ளுவர் சிலை மீது சாணியடித்தவர்களை தண்டிக்கக் கூடாது. அவர்களுக்கு திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் நன்றாக உணரும்படி சொல்லித்தர வேண்டும்.
வால்பையன் அருண்ராஜ்
நான் முகநூல் வந்ததிலிருந்து மிகவும் தேடி வாசிக்கும் பதிவுகளில் "வால் பையன்" என்கிற Arun Raj எழுதும் பதிவுகளும் ஒன்று. அறிவியல், அரசியல், பொருளாதாரம், காமம், புவியியல், மருத்துவம், முற்போக்கு என சகலவிதமான அறிவுடன் தெளிவாக எழுதுவார். இதுவரை நேரடியாக சந்தித்ததில்லை; பழகியதில்லை. நிறைய விவாதித்திருக்கிறேன், பகிர்ந்திருக்கிறேன்.
சாநக்கியர் எடப்பாடி
ஹிந்தியை வரவேற்போம்...!
காவல்துறைக்கு பாராட்டுகள்
போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்காமல் திறைமையுடன் இவ்வழக்கை கையாண்ட அந்த காவல்துறை அதிகாரி யார்? பொள்ளாச்சி பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அவரது திறமையைப் பாராட்டி ஏன் ஒரு பாராட்டுவிழா எடுக்கக்கூடாது? இதுமாதிரி "திறமையானவர்"களை சமூகத்திற்கு அடையாளப்படுத்தினால் உதவியாக இருக்கும்.
01.11.2019