29.6.21

சடங்காகிப்போன சுதந்திர தினம்

அரசியலையும் அரசு நிர்வாகத்தையும் விமர்சிப்பது தேவையற்ற வேலை என்று நினைப்பவர்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவது வீண் செயல். இவர்களால்தான் மோசமான ஆட்சியாளர்கள் தொடர்ந்து உருவாகிறார்கள். குறைகளைக் கடுமையாகச் சுட்டிக் காட்டுவதுதான் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதும் வளர்த்தெடுப்பதும் ஆகும்.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைவிட பல வகைகளில் தமிழர் மண் சீரழிக்கப்படுகிறது சுரண்டப்படுகிறது. இதை துளியும் விமர்சிக்க முனையாமல் தேசபக்தி என்ற கண்மூடித்தனத்தோடு மட்டும் சுதந்திர நாள் கொண்டாடுவது அறிவுக்குருட்டுத்தனம்.

சுதந்திரத்தைக் கொண்டாடுபவர்கள் சிறிதளவாவது அரசின் குறைகளையும் அநீதிகளையும் விமர்சியுங்கள். இதுவே தியாகிகளை போற்றும் உண்மையான வழிமுறை.

15.08.2019



No comments:

Post a Comment