விசாரணை சரியாக நடத்தப்படாத ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற அப்பாவிகளுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைதண்டனை. எந்தக் குற்றமும் செய்யாத தமிழீழ தமிழர்கள் முகாம்களில் அடைப்பு. ஆனால் ஜாதிக்கும் கட்சிக்கும் கொலை செய்தவர்களுக்கு விடுதலை...
1. தர்மபுரி பேருந்து வழக்கில் 3 மாணவிகளை எரித்துக் கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்தது அதிமுக.
2. மேலவளவில் 7 பேரை ஜாதியின் பேரால் படுகொலை செய்த 13 குற்றவாளிகளை ஆளுங்கட்சி அதிமுக எம்.எல்.ஏ. கோரிக்கையின் பேரில் தற்போது விடுதலை செய்துள்ளது அதிமுக.
3. மதுரை தோழர் லீலாவதியை படுகொலை செய்த குற்றவாளிகளை இவ்வாறே 7 ஆண்டுகளில் விடுதலை செய்தது திமுக.
4. எது நியாயமோ அதன் அடிப்படையில் நீதியை வழங்காமல் வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பு தெரிவிக்கிறது உச்ச நீதி மன்றம்.
நீதித்துறையையும் தனியார்மயமாக்கிவிட்டால்தான் என்ன? எதற்கு அரசு என்ற முகமூடி?
12.11.2019
No comments:
Post a Comment