அரசு தன் கையாளாகாத் தனத்தை நீர்த்துப் போகச் செய்யவே இவ்வளவு பண உதவித்தொகை வழங்குவது. மீட்பு பணிக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். இன்னும் பாதுகாப்பின்றி மூடப்படாமல் கிடக்கும் கிணறுகள் குறித்து அக்கறை செலுத்த சாட்டையை சுழற்றாமல் முதலில் போய் திமுக நிவாரணம் வழங்கியது தேர்தல் அரசியலின் சீரழிவு. இதை ஊக்குவிக்கும் கட்சிகள் செய்வதெல்லாம் கேவலம். இவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் மாறப்போவதில்லை என்பதுதான் புரிகிறது. இந்த நிவாரணத் தொகைகள் குறித்து அதே ஊரில் பிள்ளைகளை வளர்ப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? இவ்வளவு பண உதவி தேவையா? புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தலாமே இப்பணத்தில்.
தங்கள் நிலத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு குறித்தும், நாட்டில் இன்னும் மூடப்படாமல் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்தும், ஆழ்துளை கிணறுகள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை கடுமையாக செயல்படுத்தாத மாநில அரசு குறித்தும் பேச வேண்டிய அக்குடும்பத்தினர் அந்த சிறுவனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது, இங்கு ஆளபவனுக்கும் மக்களுக்கும் சராசரி அறிவுதான் என்பதையே காட்டுகிறது.
30.10.2019
No comments:
Post a Comment