இன்று இந்தக் குறளைப் படித்து மிகவும் வியந்தேன். வள்ளுவன் ஒரு ஒப்பிலா மாமேதை.
"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்"
- படைச்செருக்கு (1),
பொருட்பால்,
திருக்குறள்,
திருவள்ளுவர்.
"என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ
முன்நின்று கல் நின்றவர்"
எனப் பிரித்துப் படிக்கவும்.
பொருள் : போர்க்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர் ; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.
No comments:
Post a Comment