30.6.21

தமிழே நீ வாழி...!

வயற்காட்டில் விளைந்த நெற்பயிரைக் கண்ட ஒரு தமிழ்ப் புலவனின் கற்பனையைப் பாரீர்...!

தமிழே நீ வாழி...!!
***
"சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே"
- சீவக சிந்தாமணி, 53 வது பாடல்.
*
இப்பாடலின் பொருள் :
"கர்ப்பமடைந்த பச்சைப் பாம்பு போல நெற்பயிரின் தண்டு பெருத்து, பண்பில்லாதவரிடமுள்ள செல்வம் போல திமிராக நின்று, தேர்ந்து கற்றோர் இடமுள்ள செல்வம் போல கதிர் வைத்து பணிவாய் தலை குனிந்து நெற்மணி காய்த்ததுவே"

10.11.2019

No comments:

Post a Comment