17.6.21

ஹிந்தி ஆணவம்

ஹிந்திக்காரர்கள், இந்தியாவில் உள்ள மற்ற மொழிக்காரர்களை எல்லாம் தங்களின் அடிமைகளாக நினைப்பதன் ஆணவம்தான் ஹிந்தி மொழியைத் திணிக்கும் எண்ணம்.

தம் மதிப்பை உணராத; சொம்பு தூக்கிப் பிழைக்கும் எண்ணமும் அடிமை உணர்வும் நிரம்பியவர்கள்தான் ஹிந்திக்காரர்களின் ஆணவத்தை முன்னேற்றம் என்று பொய் பரப்புரை செய்கிறார்கள்.
ஹிந்தி படித்த மாணவர்கள் 5 லட்சம் பேர் ஹிந்தியிலேயே தேர்ச்சியடையாத நிலையில், 'முன்னேற்றம்', 'மயிரு' என்று தமிழ்நாட்டில் கம்பு சுற்றுகிறார்கள். ஹிந்தி பேசும் எந்த மாநிலமாவது எதிலாவது வளர்ந்திருக்கிறதா?
இந்தியா நம் நாடு என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் தலைநகரில் நம் மொழி இருக்கிறதா? இது அவமானமில்லையா? இதைக் கேட்க முதுகெலும்பும் சிந்தனையும் அற்ற ஜந்துக்கள்தான் இங்கே வந்து ஹிந்தியை பரப்ப தானாய் முதுகு குனிகிறார்கள்.
உலகிலேயே மூத்த மொழியும் வளம் மிக்க மொழியுமான தமிழ் மொழியே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன? தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்காடவும்கூட தமிழுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஹிந்தி வரவேண்டும் என்போர்கள் என்ன ஜென்மங்கள்?
உங்களுக்கு வேண்டுமென்றால் எந்த மொழியையும் படியுங்கள். யார் தடுப்பது? குறைந்த கட்டணத்தில் "ஹிந்தி பிரச்சார சபா" ஹிந்தி சொல்லித் தருகிறதே, படிக்க வேண்டியதுதானே? படித்து முன்னேற வேண்டியதுதானே...?
1947 -க்கு முன்புவரை நமக்கும் ஹிந்திக்காரனுக்கும் தொடர்பில்லை. நம்மை அவனுடன் சேர்த்துக்கொண்டு என் மொழியைப் படி என்று நம்மை மிரட்ட அவன் யார்? தமிழைவிட எந்தவிதத்திலும் சிறப்பில்லாத ஹிந்தி மொழி தமிழர்களுக்கு எதற்கு?
கொஞ்சமாவது தமிழர் வரலாறும் சமூக அறிவும் இருந்தால் இப்படி பேச முடியுமா?

07.06.2019



No comments:

Post a Comment