தமிழனின் சிறப்பு வெறும் இட்லி சட்னி மட்டும்தானா? இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் திருவாளர் மோடி? அவரென்ன உணவுக்கடை முதலாளியா? ஒரு நாட்டின் தலைமை அமைச்சர் அல்லவா? தமிழர்கள் தின்பது மட்டும்தான் சிறப்பு என்று கிண்டலாய் சொல்லிவிட்டு தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவிர்த்துவிட்டு அனைத்திலும் சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள். இது தமிழையும் தமிழர்களையும் அவமானப்படுத்துவது இல்லையா?
சமீபமாக பாஜக தலைமை தமிழ் தமிழ் என்று நீலிவேடம் போடக் காரணம் என்னவென்றால் தமிழை ஓரங்கட்ட தமது ஆட்சியில் நடக்கும் திட்டங்களை தமது கட்சிக்காரர்களுக்கும் தெரியாதவண்ணம் திசைதிருப்பத்தான். தமிழர்களையே அடியாட்களாக வைத்துக்கொள்ளும் நரித்தனம்தான். இதற்கென ஒரு அப்பாவிக் கூட்டம் இருக்கிறதே...!
பார்ப்பன ஜாதி சங்க கட்சியான பாஜக-வை இதே நரித்தனத்தால் தானே அவர்கள் ஹிந்துக்களுக்கான கட்சி என்று அப்பாவிகளை நம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாரால் வீழ்ந்து கிடந்தோமே அவர்களையே தம் தலைவர்களாய் ஏற்க அறிவிருப்போரால் முடியுமா?
No comments:
Post a Comment