திருவள்ளுவர் சிலை மீது சாணியடித்தவர்களை தண்டிக்கக் கூடாது. அவர்களுக்கு திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் நன்றாக உணரும்படி சொல்லித்தர வேண்டும்.
மேலும், திருக்குறளில் மதக்கருத்துகள் இல்லை என்பது உண்மை இல்லை. மதங்களின் பெயர் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் மதங்கள் சங்கமிக்கும் இடம் ஒரே புள்ளிதான். அப்புள்ளிகள் திருக்குறளில் உண்டு.
எப்படி ஒரு மனிதனின் மூளைக்குள் பலவிதமான சிந்தனைகள் இருக்கிறதோ அதேபோன்று வள்ளுவருக்குள்ளும் பலவிதமான பார்வைகள் இருந்திருக்கிறது. 2000 வருடங்கள் கழித்து இதெல்லாம் ஒரு மதம் களவு கொள்ளக்கூடும் என்றெல்லாம் அவர் சிந்தித்தா எழுதியிருப்பார்?
அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் சமூகங்கள் பற்றியும் ஓரிரு குறளில் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு ஹிந்துக் கடவுளாக; ஹிந்து மதமாக அடையாளம் கொள்ளப்படும் பலவற்றை அவர் குறளில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதெல்லாம் அன்றைக்கு தமிழர்களுக்கு ஏதோவொரு வகையில் தொடர்பாக இருந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன். அறிவுக்கேற்ற தமிழர்களின் பலவற்றையும் ஹிந்து மதம் களவாடியுள்ளது என்பதால் அவரை ஹிந்து என்று சொல்வதும் ஏற்பில்லாதது.
திருவள்ளுவரை ஆத்திகரும் நாத்திகரும் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. அல்லது இருதரப்பிற்கும் பொதுவானவர். இன்றைய அளவுகோல்களைக் கொண்டு அவரை அளந்து பார்ப்பது பார்வைக்குறைபாடே.
யாரேனும் கலந்துரையாடல் செய்ய விரும்பினால் பின்னூட்டத்திற்கு வரலாம். உரையாடலை இக்குறளிலிருந்து ஆரம்பிக்கலாம்...
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
- குறள் 380.
No comments:
Post a Comment