29.6.21

இலுமினாட்டி - உண்மையா? கற்பனையா?

 "இலுமினாட்டி - வரலாறும் அரசியலும்"

கீழைக்காற்று பதிப்பகத்தின் வெளியீடு இப்புத்தகம். விலை 40 ரூபாய்தான். கலையரசன் & ப.ஜெயசீலன் ஆகியோர் பல நாளிதழ்களில் இலுமினாட்டிகள் பற்றி எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்கள்.
தனக்கு விடை தெரியாத; ஏற்கெனவே தான் சாய்ந்துள்ள கருத்துக்களின் மீதான அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் கட்டுக்கதைகளை மனித அறிவு ஏன் நம்புகிறது? மெத்தப் படித்தவர்களும், அறிவு உள்ளோரும் ஹீலர் பாஸ்கர் & பாரிசாலன் போன்றோர்கள் அவிழ்த்துவிடும் இம்மாதிரியான Conspiracy Theories -களை உண்மையென்று நம்புவது எப்படி? ஏன்? இதன் அடிப்படை உளவியல் காரணமென்ன என்பதை அருமையாக விளக்குகிறது இச்சிறு நூல்.
எந்த சார்பும் இன்றி உண்மைகளை உணரும் அறிவுள்ளோர் எவர்க்கும் "இலுமினாட்டிகள்" என்பது மிகப் பெரிய கட்டுக்கதை என்பதை இந்த நூல் எளிமையாக உணர்த்தும்.
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கட்டுரைகள். வெறும் 32 பக்கங்கள்தான். அவசியம் வாங்கிப் படியுங்கள். பல பொய்களிலிருந்து தெளிவு பிறக்கும்.

27.07.2019


No comments:

Post a Comment