வலது பக்கத்து வீட்டுக்காரன் தன்னை மிரட்டுகிறான்; தாக்க வருகிறான் என்று இடது பக்கத்து வீட்டுக்காரனிடம் உதவி கேட்டு வருகிறான் ஒருவன். இந்த இடது வீட்டுக்காரன் தான் பெரிய யோக்கியன் என்று ஊரை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறான். அதை நம்பித்தான் உதவி கேட்டு வருகிறான் பலவீனமான அவன். ஆனால் அந்த யோக்கியமான பெரிய வீட்டுக்காரனோ தான் உதவி செய்வதாகக் கூறிவிட்டு, அவனை நம்ப வைக்க சிறிது காலம் உதவியும் செய்து விட்டு பின்னொரு சமயம் பார்த்து, அந்த வீட்டை தனக்கு சொந்தம் என்று வளைத்துப் போட்டுக் கொள்கிறான். அந்த வீட்டுக்காரனை தன் அடிமை என்கிறான். தங்கள் உரிமையைக் கேட்கும் அந்த வீட்டுப் பிள்ளைகளை தீவிரவாதி என்கிறான்; தன் பலம் காட்டி மிரட்டி சுட்டும் தள்ளுகிறான். அவர்களுக்கு வேறு எங்கிருந்தும் உதவி கிடைக்காதபடியும் தந்திரமாக பார்த்துக் கொள்கிறான்.
No comments:
Post a Comment