மார்க்சிய கோட்பாட்டில் ஒரு தத்துவம் "நிலைமறுப்பின் நிலைமறுப்பு". இதற்கொப்ப பொருள் தரும் ஒரு தமிழ் இலக்கியப் பாடல்...
***
"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே
மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால்
நமக்கு நாம் அழாதது என்னோ..!"
- குண்டலகேசி, 9 வது பாடல்.
மார்க்சியத்தின் இக்கோட்பாடு சொல்வது இயற்கையில் ஒரு பொருளின் தன்மை நிலை மறுக்கப்பட்டு (முற்றிலுமாக இறந்து) பின்னர் அது வேறாக மாறுகிறது. பின் அதுவும் நிலை மறுக்கப்பட்டு (இறந்து) வேறாக மாறுகிறது.
அதாவது ஒரு செடியில் பூக்கும் பூ தன் நிலை மறுக்கப்பட்டு பின் காயாகிறது. பின் காய் நிலை இறந்துபட்டு பழமாகிறது. பின் பழம் நிலை இறந்து விதையாகிறது. பின் விதை நிலை இறந்து செடியாகிறது. செடி பருவம் இறந்து பூ பருவம் எய்துகிறது. இப்படி இயற்கையில் தொடர்ந்து மாற்றம் நிகழ்கிறது. மாறாதது எதுவுமில்லை. மாற்றமே மாறாதது என்கிறார் மார்க்ஸ். மரணம்கூட ஒரு நிலைமறுப்பு என்கிறார். மார்க்சியம் ஒரு மாபெரும் அறிவியல் அரசியல் கோட்பாடு. அதில் ஒரு விதி இது.
இப்பாடலின் பொருள் விந்து தன்மை இறந்து குழந்தை, குழந்தை தன்மை இறந்து காளைப் பருவம், காளைப் பருவமும் காமுறும் பருவமும் இறந்து மூப்பு பருவம் வந்து... இப்படி நாளும் நாளும் நமக்குள் ஒன்று சாகின்றது, இதற்கெல்லாம் அழாதது ஏனோ?...
10.11.2019
No comments:
Post a Comment