SBI வங்கியில் தலா நூறு கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி செலுத்தாத 220 பேரின் வாராக் கடன் ரூ 76,000 கோடியை வங்கி நிர்வாகம் தள்ளுபடி செய்திருப்பதாக RTI மூலம் தகவல் கிடைத்திருக்கிறது. யாருக்காக இத்தனை ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டவர்கள் யார்? மத்திய அரசு இதை இனி யார் தலையில் கட்ட போகிறது? இதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம்.
ஏனெனில் நமக்கு குப்பை பொறுக்கும் ஒரு ஒப்பற்ற பிரதமர் கிடைத்திருக்கிறார்.
ஹிந்திக்கும் சமஸ்கிருத வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி வழங்குவார்கள். தமிழ் வளர்ச்சிக்கு ஒரு ஓட்டை காலணா கூட ஒதுக்க மாட்டார். ஆனாலும் நாம் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.
ஏனெனில் நமக்கு நம்முடைய வேட்டி சட்டை உடுத்திக்கொண்டு நம் கடற்கரையில் குப்பை பொறுக்கும் ஒரு அருமையான பிரதமர் கிடைத்திருக்கிறார் பெருமைப்படுவோம்.
தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழுக்கு அனுமதியில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு பைசாகூட உதவியில்லை. மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் சமஸ்கிருதத்தை தவிர வேறு எந்த மொழியிலும் பெயர் வைக்க அனுமதியில்லை. அதிலும் மிகத்தொன்மையான; அவருக்கு மிகவும் பிடித்த ஆதிமொழியான தமிழ் மொழிக்கும் தகுதியில்லை.
மத்திய அரசுப் பணி தேர்வுகளில் இருந்து தமிழை நீக்கி அங்கே ஹிந்தியை புகுத்தி வட இந்தியர்களை பணிக்கு அமர்த்தி தமிழக மக்களின் வேலைவாய்ப்புகளிலும் உரிமைகளிலும் மத்திய அரசு வயிற்றில் அடிக்கிறது.
ஆனாலும் நாம் இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் ஐநா சபையில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பேசியதோடு நிற்காமல் இப்போது நமது ஒப்பற்ற பிரதமர் குப்பை வேறு பொறுக்குகிறார்.
No comments:
Post a Comment