BJP யாருக்கான கட்சி? அறிவுள்ள ஹிந்துக்கள் கவனத்திற்கு...!!!
மருத்துவ பட்டமேற்படிப்புக்கான நீட் தேர்வில் OBC வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லை’’. ஆனால் உயர் வகுப்பினருக்கு 10% உண்டு.
- அதிர்ச்சி தகவல்.
தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 1,758 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை கொண்டு அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இதில் 50 சதவீதம் அதாவது, 879 இடங்கள் மத்திய அரசிடம் தரப்படுகின்றன.
ஆண்டுதோறும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நீட் PG (முதுநிலை) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020-ம் ஆண்டுக்கான நீட் PG தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் PG தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிக்கையில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50 % அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 % (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவீதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீதம் (4,155 இடங்கள் ) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும். ஆனால், இந்த அறிவிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு (OBC) மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் OBC-க்கு வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்கள் மட்டுமே இதர பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைக்கிறது. இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர்ந்தால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்காமல் போகும். ஆனால் இதே ஆணையில் பொதுப்பிரிவில் உள்ள உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடான 10 % -ஐ மொத்தமுள்ள 15,387 இடங்களிலும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 1,758 மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான இடங்களை கொண்டு அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இதில் 50 சதவீதம் அதாவது, 879 இடங்கள் மத்திய அரசிடம் தரப்படுகின்றன. இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. மத்திய அரசின் 27% ஒதுக்கீடும் தரப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
21.11.2019
No comments:
Post a Comment