முன்பொருமுறை மழை வெள்ளத்தில் சென்னை தத்தளித்தபோது வெளியூர்களிலிருந்து துப்புரவு பணி செய்ய பலர் அழைத்து வரப்பட்டனர். துப்புரவு பணியின் போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினாலும் மருத்துவ உதவிகள் வழங்காத காரணத்தாலும் கொடிய தொற்று நோய்களால் சிலர் சென்னையில் இறந்தனர். அப்போது ஆளுங்கட்சிக்கு இது களங்கமாக இருக்கும் என்று பல ஊடகங்களில் இச்செய்திகள் தவிர்க்கப்பட்டது, சில ஊடகங்களில் ஒப்புக்காக வெளியிடப்பட்டது.
அவர்களுக்கு நிதி உதவி கிடைப்பதில் பெரிய தாமதமும் அநீதியும் உரிய தொகையும் கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டது என்பதும் செய்தித்தாள்களில் வெளியானது.
சமீபத்தில் கூட எல்லையில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் குடும்பத்திற்கு கிடைக்கவேண்டிய நிதி பல போராட்டங்களுக்கு பின்னரே கிடைக்கப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் அதைத் தொடர்ந்து எழுதி அம்பலப்படுத்திய பின்னரே இதுவும் நடந்தது.
பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்கு பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. ஆனால் உயர்சாதியினரின் 10% சதவிகித இட ஒதுக்கீடோ சுலபமாக சட்டமாகி விட்டது.
துப்புரவு பணியாளர்கள் பாதிக்கப்படும்போது காதுகள் கேட்காமல் போகும் அரசாங்கம், அர்ச்சகர்களுக்கு ஒரு ஆபத்து என்பதும் உடனே உதவி கரம் நீட்டுகிறது.
ஏன் இந்த ஓரவஞ்சனை?
அர்ச்சகர்களால் நாட்டுக்கோ மக்களுக்கோ உண்டாகும் நன்மைகள் என்ன?
No comments:
Post a Comment