29.6.21

மாறாத அடிமை குணம்

தமிழ்நாட்டின் முதல்வருக்கு இதற்குக்கூட அதிகாரம் இல்லையாம்? இவ்வளவு டம்மியான பதவியா முதல்வர் பதவி என்பது? ஈழப்போரில் நானும்கூட தி.மு.க. - வையும் கலைஞரையும் கடுமையாக விமர்சித்தேன். பலரும் விமர்சித்தார்கள். இன்னமும் விமர்சிக்கிறார்கள். அவர்களெல்லாம் இதைக் கண்டுகொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இப்பேர்ப்பட்ட பதவியை பிடித்துதான் மொத்த தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போடப் போவதாக மேடைகளில் பலர் கதையளக்கிறார்கள். அப்படி பேசுபவர்கள் பேசுவதில் ஒரு கால் பங்காவது அடிதடியாகவாவது தமிழுக்காக செயல்பட்டால் மகிழ்ச்சிதான். ஆனால் செயல்பாட்டின் உண்மையோ மாறாக உள்ளது.

என்ன இடர் வந்தாலும் தமிழர்க்கென்று அமையும் தனிநாடுதான் நிரந்தரத் தீர்வு. உலகமெலாம் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாதுகாப்பு. அதை கத்தியின்றி இரத்தமின்றி அறவழியிலும் சாதிக்கலாம். அதற்கான ஆளுமைகள் இல்லாததுதான் தமிழ்ச் சமூகத்தின் பலவீனம்.
ஆனால்..., தமிழ்நாட்டில் தமிழ் இல்லை, வடவர் ஆதிக்கம், பிறமொழியாளர்களின் கையில் அரசு அதிகாரம் என்று நிலைமை என்னவோ இங்கே தலைகீழாய் அல்லவா கிடக்கிறது...!
மக்களுக்காக உண்மையிலேயே போராடி துயர்படுகிறவர்களைக் கண்டு பின் நிற்காமல், விளம்பரத்திற்கும் பெயருக்கும் புகழுக்கும் சமூக அக்கறைப் புலிகள் போல் முகம் காட்டும் பொய்யர்களைத்தான் ஊடகங்கள் கொண்டாடுகிறது என்பது இன்னொரு மா அவலம்.

03.10.2019


No comments:

Post a Comment