29.6.21

கீழடி

நாம் ஹிந்து என்றோ திராவிடன் என்றோ தமிழன் என்றோ அல்லது பொதுமனிதன் என்றோ எதனடிப்படையில் பெருமை பேசிக் கொண்டாலும் நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டாலும், எந்த ஊர்க்காரன் என்றாலும் எந்த ஜாதிக்காரன் என்றாலும் அந்தந்த ஊரின் பொதுக்கழிப்பிடத்தின் லட்சணம் என்னவாக இருக்கிறது? ஜாதிப்பெருமை பீற்றிக்கொள்ளும் பல கிராமங்களில் மழைக்காலங்களில் கழிப்பிட வசதியின் நிலைமை என்ன? அரசு நிர்வாகம் & நீதி நிர்வாகமாவது நல்லபடியாக இருக்கிறதா? கல்வி? மருத்துவம்? வேலைவாய்ப்பு? சிந்தித்து வாக்களிக்கும் திறன்?

ஆயிரம் பெருமை இருந்தாலும் இன்னும் நாம் நம் மேல்நாட்டுக்காரர்களைவிட சுகாதாரம் / தூய்மை பேணும் செயல்களிலும், சம்பளம் கொடுக்கும் முறையிலும், வேலைக்காரர்களை நடத்தும் முறையிலும் இன்னும் பலவற்றிலும் பின்தங்கித்தான் உள்ளோம். இதை சரிசெய்து எல்லாரும் எல்லாமும் பெற்று பேதமற்று சண்டையற்று மகிழ்ச்சியாய் வாழ மேற்படி ஆகவேண்டியதை நோக்கி செயல்படுவதை விடுத்து இப்படி ஆளாளுக்கு பல பேர்களில் தமிழர்களுக்குள்ளாகவே தொடர் வீண் விவாதம் செய்துகொண்டிருந்தால் ஆகப்போகும் பயன் என்ன?

20.09.2019



No comments:

Post a Comment