30.6.21

தமிழுக்கு திராவிடமே பாதுகாப்பு

கருத்திலும் நடையிலும் தமிழ் மொழி எப்பேர்ப்பட்ட வளமும் செழுமையும் கொண்டது என்பதை உணராதவர்களே பார்ப்பனிய வைதீக மதத்தை எதிர்க்காமல் இருக்க முடியும். திராவிடம் தமிழுக்கு தீது செய்தது என்பதை வெறும் மேலோட்டமான அரசியல் பார்வையைக் கொண்டு மட்டும் விமர்சிப்போர் சற்று தமிழ் இலக்கியம் பக்கம் ஆழ்ந்து கவனிக்கவும். திராவிட இயக்கம் இல்லாது போயிருந்தால் வெறும் வைதீக ஹிந்து மதக் கருத்துக்கள் மட்டுமே தமிழ் இலக்கியம் என்றாகி இருக்கும். திராவிடம் தமிழுக்கு அரணாக இருந்துள்ளதை மறுக்க முடியாது. இனி தமிழின் வளமையை பார்ப்பனியம் அழிக்கும் சூழல் வந்துவிட்டது.

பயத்தால் பார்ப்பனீய கடவுள் கருத்தைப் பற்றியவர்கள் தமிழ்ப் புலவர்களின் பார்வையும் உள்வாங்குவது நல்லது. கடவுள் வேண்டுமென்போர் தமிழர் மெய்யியல் பார்வையை பின்பற்றுங்கள். இது யாரையும் ஏமாற்றாதது. சுய அறிவைத் தூண்டுவது. பார்ப்பனியம் போல் யோசிக்காமல் பின்பற்றச் சொல்வதல்ல.
புறநானூற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம்.
***
"ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே"
- பக்குடுக்கை நன்கணியார்,
புறநானூறு 194 வது பாடல்.
***

இப்பாடலின் பொருள் :
"ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன்.
இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் இந்த இயல்பை உணர்ந்தவர்கள் துன்பத்தின்போதும் இனியதைக் காணுங்கள்"

11.11.2019

No comments:

Post a Comment