தமிழ் சமூகத்திற்கு ஓராயிரம் பிரச்சினை இருக்கிறது. எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே இயக்கம் மட்டுமே தீர்த்துவிடாது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். கொள்கைகளை தோழமையோடு விமர்சிக்காமல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடன் சண்டை மூட்டிக் கொண்டிருக்கும் வேலையையே அரசியலாக பலர் தமிழர் மண்ணில் செய்கின்றனர். இதனால் தமிழர்களின் ஆற்றல் வெட்டி வீண் விவாதங்களில் விரயம் ஆகிறது. தமிழ் உணர்வும், தமிழர் உரிமைகள் பறிபோவதும், தமிழர் பிரச்சினைகளும் பின்னுக்குப் போய் இவர்களின் வெற்றுக் கூச்சலே எப்போதும் முன் நிற்கிறது.
இந்தக் காணொளியைப் பாருங்கள். பெங்களூருவில் தமிழில் பெயர் வைக்கக் கூடாது என காவல்துறையே அடாவடி செய்கிறது. இங்கோ யார் பெரியவன் என்ற மோதல்களிலேயே தமிழர்களின் கவனத்தை முழுநேரமாக சிதைக்கிறார்கள். போதாக்குறைக்கு ஜாதிவெறி மனநோய் ஒருபுறம்.
No comments:
Post a Comment