30.6.21

சாநக்கியர் எடப்பாடி...?

1. சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஏன் நிராகரிக்கப்பட்டது?

2. நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டத்திற்கான சட்ட நடவடிக்கை என்ன?
3. தமிழ்நாடு அரசு பணிகளில் (TNPSC) பிற மாநிலத்தவர்களை பணியமர்த்தும் சட்டத் திருத்தம் செய்து தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியதற்கு என்ன பதில்?
4. தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை பணிகளில் தமிழர்களை தேர்ந்தெடுக்காதது ஏன்?
5. அதிமுக பேனர் விழுந்து இறந்ததற்கு பேனர் வைத்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
6. ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் போலிசாரால் கொல்லப்பட்ட 15 பேருக்கான விசாரணை நிலை என்ன?
7. பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் கைது செய்யப்பட்ட அனைவரும் வெளியே வந்தது எப்படி?
8. படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?
9. ஆர் கே நகர் பணப்பட்டுவாடா வழக்கு என்ன ஆனது?
10. இளைஞர்களை சீரழிக்கும் குட்கா வழக்கின் நிலை என்ன?
11. 11 எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்கு என்ன ஆனது?
12. ராதாபுரம் தொகுதி அஞ்சல் வாக்கு முடிவுகளை எப்போது அறிவிப்பார்கள்?
13. கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரத்திற்கு கட்டாயப்படுத்திய நிர்மலா தேவி வழக்கு என்ன ஆனது? குற்றவாளிகள் யார்?
14. ஜெயலலிதா மரணத்திற்கான ஆறுமுகம் விசாரணை ஆணையம் என்ன ஆனது?
15. ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலைகளின் குற்றவாளி யார்?
16. தானே கேட்டுப்பெற்ற ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஏன் ஆஜராகமாட்டேன் என்கிறார்?
17. கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் எழுவர் விடுதலை என்ன ஆயிற்று?
18. கோவில் சிலைகள் கடத்தல் வழக்கு ஏன் நின்று போனது?

16.11.2019



No comments:

Post a Comment