அரசுக்கு முட்டுக் கொடுப்பவர்களை நன்றாக கவனியுங்கள். ஜாதி மத பிற்போக்குவாதிகளாகவே இருக்கிறார்கள். அல்லது பதவியில் இருக்கும் தன் ஜாதி மதக் கட்சிக்காரர்களுக்காக குரைக்கிறார்கள்.
இந்த ஆழ்துளைக் கிணறு சம்பவம் ஒன்றை மட்டுமா வைத்து பலரும் அரசை விமர்சிக்கிறார்கள்?
முன்னர் ஓகிப்புயல், கடலில் எண்ணெய் கலப்பு, குரங்கனி தீ விபத்து, விளம்பரப் பலகை விபத்து... இப்படி பல சம்பவங்கள். ஓ.பி.எஸ். உறவுக்காரனுக்கு மட்டும் உதவ முன்வரும் ராணுவ ஹெலிகப்டர்கள், இந்த மாதிரி பேரிடர் சமயத்தில் பயன்படுத்துவதை யார் தடுப்பது? மீட்புக்குழு அரக்கோணத்திலிருந்து திருச்சிக்குப் போக 18 மணி நேரம் எடுத்துக் கொள்வதற்கு பேர்தான் பேரிடர் நடவடிக்கையா?
சாதாரண அசம்பாவிதங்களையே துரிதமாக கையாள முடியாத இவர்கள் எப்படி எதற்காக அணு உலைகளை இங்கே கொண்டு வருகிறார்கள்? ஒப்பந்தத்தில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது என்று இருக்கும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்? மக்களை மதிக்கும் முன்னேறிய நாடுகளேகூட அணு உலை விபத்தை கையாளத் திணறுகிறது; கைவிடுகிறது.
ஆழ்துளையில் இப்போதுதான் முதன்முறையாக குழந்தை விழுகிறதா? 13 வது தடவை. அவைகளிலிருந்து அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொல்லும் பொம்மை முதல்வரைக் கொண்ட நாட்டில் அதிகாரிகளுக்கு முட்டுக் கொடுப்பது எவ்வளவு பிற்போக்குத்தனம்?...
அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்கள் நாளை இப்படியும் சொல்லலாம்...
போதிய மருந்து மாத்திரை மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவ மனைகளில் சேர்ந்து செத்தது அவர் தவறு. ப்ரேக் பிடிக்காத அரசுப் பேருந்துகளில் ஏறி விபத்தில் சிக்கியது உங்கள் தவறு. குண்டும் குழியுமான சாலைகளில் வண்டி ஓட்டி கைகால்களை உடைத்துக் கொண்டது உங்கள் தவறு. அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைத் தொட்டது உங்கள் தவறு. தண்ணீர் இல்லாத ஊர்களில் வாழ்வது மக்கள் தவறு.... etc.,
என்ன கூந்தலுக்காக அரசு என்ற முறை ஏற்பட்டது? மந்தை மனோபவத்தில் வாழும் மக்களை ஒழுங்குபடுத்தத்தான் அரசு எனும் நிர்வாக முறை. அதுவே ஒழுங்கில்லையென்றால் விமர்சிக்காமல் அதற்கு பூஜையா செய்ய வேண்டும்?
திறமற்ற அரசுகளுக்கு மரியாதை என்ன வேண்டிக் கிடக்கிறது? முன்னேறிய நாடுகளைக் கவனித்துதான் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். பின் இவர்கள் கையில் இருக்கும் அதிகாரங்கள் எதற்கு? மணல் கொள்ளையடிக்கவும் ஊழல் செய்து சொத்து சேர்க்கவுமா? தத்தித் தவழ்ந்து பிறர் காலில் விழுந்து இவர்களெல்லாம் எதற்கு பதவிக்கு வருகிறார்கள்?
No comments:
Post a Comment