29.6.21

சொல்வதெல்லாம் உண்மை

சிலசமயம் youtube-ல் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியைப் பார்ப்பேன். இன்னும் நம் நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இப்படித்தான் வெளியே தெரியாமல் இருக்கிறது. இன்னொருபுறத்தில் சற்று மாறியுள்ளது. இந்த சிக்கல்களை எல்லாம் தீர்க்கும்படியான எளிமையான நிர்வாக முறையும் கண்டிப்பான தீர்வு முறையும் அரசிடம் இல்லை. வேறு வழிமுறை தெரியாதவர்கள் ஆதரவு இல்லாதவர்கள் இப்படியேனும் ஒரு தீர்வு கண்டடைகிறார்கள். இத்தனை அரசியல் கட்சிகளும் மக்கள் மேல் அக்கறை கொண்டு சீர்திருத்தம் செய்ய முனைந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரலாம்தான். ஆனால் கட்சி நடத்துபவர்களும் பல தலைமைகளுமேகூட தகுதி இன்றி இருக்கிறதே.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் எல்லாம் வேறு ஏதோ கோள்களில் வாழ்பவர்கள் அல்ல. இந்த பூமியின் ஏதோ ஒரு மூலையில் வாழ்பவர்கள்தான். நியாயமாக இந்த நிகழ்ச்சியின் மீது நம்மில் யாருக்கேனும் கோபம் வந்தால், அது இந்நாட்டின் நீதித்துறை, கல்வித்துறை மற்றும் அரசு நிர்வாகத்துறை போன்றவை மீதான கோபமாகத்தான் மாற வேண்டும்.

20.08.2019



No comments:

Post a Comment