இந்தத் தேர்தல்ல வாக்கு சதவீதம் கூடியிருக்குன்னு சமாளிக்கிற எல்லா கட்சிக்காரங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்....
எங்கப்பா கட்சி ஆரம்பிச்சி ஒரு போராட்டமும் பண்ணல. ஒரு ஆணியும் புடுங்கல. ஆனாலும் 5 வருசத்துல 29 எம்.எல்.ஏ. வோட திமுக-வையும் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி தலைவர் ஆனார். எங்களுக்கு வாக்கு சதவீதம் இருக்குன்னு நெனச்சிட்டிருந்தோம். எங்கம்மா இப்பயும் இப்டித்தான் ஊரை நம்ப வைக்குது. ஆனா இப்ப எங்க நெலமை? 21 எம்.எல்.ஏ. வெச்சிருந்த பா.ம.க-வோட இப்போதைய நெலம? இந்த வாக்கு சதவீதமெல்லாம் சும்மா. நிரந்தரமில்ல. தொடர்ந்து மக்கள்கிட்ட நம்பிக்கைய ஏற்படுத்துனாதான் கிரவுண்ட்ல இருப்போம். இல்லன்னா எங்களோட நெலமைதான் உங்களுக்கும். வாக்கு சதவீதம் கூடும் குறையும், அதனால ஒரு பயனுமில்ல. ஜெயிச்சமா இல்லையான்றதுதான் முக்கியம். இதையே பேசிக்கிட்டு எங்க நெலமைக்கு ஆளாகிடாதிங்க. உங்களையெல்லாம் அசால்ட்டா தூக்கி சாப்டவரு எங்க அப்பாரு. இப்ப எங்க கட்சிக்கு அங்கீகாரமே இல்லையாம். சோ சேட்...
25.05.2019
No comments:
Post a Comment